ETV Bharat / state

அங்கொடா லொக்காவின் டிஎன்ஏ ஆய்விற்கு சிபிசிஐடி பரிந்துரை! - இலங்கை தாதா அங்கொடா லொக்கா

கோயம்புத்தூர்: அங்கொடா லொக்காவின் டிஎன்ஏவை ஆய்விற்கு உட்படுத்த சிபிசிஐடி காவல் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர்.

angoda lokka
angoda lokka
author img

By

Published : Aug 5, 2020, 2:57 PM IST

இலங்கையில் போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் அங்கொடா லொக்கா. இவர் கடந்த ஆறு மாதங்களாக கோயம்புத்தூர் விமான நிலையம் அருகிலுள்ள சேரன் மாநகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்துவந்துள்ளார். கடந்த ஜூலை 3ஆம் தேதி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரின் உடலை போலியான ஆவணங்கள் தயாரித்து மதுரையில் எரித்துள்ளனர்.

இவரின் மரணத்திற்குப் பிறகு தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்துவருகின்றன. இந்த வழங்கை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். அங்கொடா லொக்காவின் உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் மதுரை மயானத்தில் கொடுக்கப்பட்ட சான்றிதழும் வெளியாகியுள்ளன.

மேலும், அங்கொடா லொக்காவின் உடலை உடற்கூறாய்வு செய்யும்போது கல்லீரல் போன்ற பாகங்கள் எடுத்து வைக்கப்பட்டிருக்கும். அதனை டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்துவதற்கும், இலங்கையில் அவரின் உறவினர்கள் இருந்தால் அவர்களிடம் ரத்த மாதிரிகள் எடுத்து அதனையும் டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தி அறிக்கை தெரிவிக்க சிபிசிஐடி பரிந்துரை செய்துள்ளது.

இதையும் படிங்க:இலங்கை தாதா அங்கொட லொக்கா வழக்கில் திடீர் திருப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.