ETV Bharat / state

'17 பேர் உயிரிழப்புக்கு காரணமானவர் மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை' - தீண்டாமைச் சுவர் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்

கோவை: சுவர் இடிந்து 17 பேர் உயிரிழப்புக்கு காரணமான கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தேசிய பட்டியலின ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

Coimbatore wall collapse
Coimbatore wall collapse
author img

By

Published : Dec 5, 2019, 6:45 PM IST

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகிய இடத்தை தேசிய பட்டியலின ஆணையத்தின் தலைவர் ராம் சங்கர் கத்தாரி, துணைத் தலைவர் முருகன் ஆகியோர் பார்வையிட்டனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் ஆகியோர் உடனிருந்தனர். விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், "17 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரிக்க வந்திருக்கிறோம். இந்தப் பகுதியில் மீதமுள்ள சுற்றுச்சுவர்களை முழுமையாக இடிக்க உத்தரவிட்டுள்ளோம். மேலும் அறிவிக்கப்பட்டுள்ள 10 லட்சம் நிவாரணத்தில் தற்போது நான்கு லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதியுள்ள ஆறு லட்சத்தை நாளைக்குள் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

ஓரு வாரத்திற்குள் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்கவும் அறிவுறுத்தியிருக்கிறோம். கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவும் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியிருக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.

தேசிய பட்டியலின ஆணைய துணைத் தலைவர் முருகன் செய்தியாளர் சந்திப்பு

இது தீண்டாமை சுவரா என்பது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் என்று உத்தரவாதம் அளித்த அவர், தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களில் இது போன்ற சுவர்கள் இருப்பது குறித்து புகார்கள் வந்துள்ளதாகவும் இது குறித்தும் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் முருகன் உறுதிபட கூறினார்.

இதையும் படிங்க: 'தீண்டாமை சுவர் விவகாரத்தில் அரசுதான் முதல் குற்றவாளி' - எவிடன்ஸ் கதிர்

Intro:கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது எஸ்.சி , எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் பேட்டிBody:கோவை மாவட்டம்
மேட்டுபாளையம் நடூர் பகுதியில் வீட்டின் சுற்றுசுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலியாகிய இடத்தை
தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவர் ராம் சங்கர் கத்தாரி, துணைத் தலைவர்
முருகன் ஆகியோர் சம்பவ பார்வையிட்டனர். அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உட்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். சுவர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட இடத்தை பார்வையிட்ட அவர்கள், பாதிக்கப்பட்ட மக்களையும் நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தனர்.பின்னர் அவர்கள் அளித்த மனுக்களை பெற்றுக்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.

தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது 17 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து
சுயமோட்டாவாக விசாரிக்க வந்திருக்கின்றோம் என தெரிவித்தார்.பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லி இருக்கின்றோம் என கூறிய அவர், இந்த பகுதியில் உள்ள சுற்றுசுவர்களை முழுமையாக இடிக்க உத்திரவிடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் 10 லட்சம் நிவாரணம் தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் ,
4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது மீதியுள்ள 6 லட்சத்தை நாளைக்குள் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.ஓரு வாரத்திற்குள் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் தகுதியானவர்களுக்கு அரசு வேலை வழங்கவும் அறிவுறுத்தி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.கைது செய்யப்பட்ட வீட்டு உரிமையாளர் சிவசுப்பிரமணியம் மீது எஸ்.சி , எஸ்.டி வன்கொடுமை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் விரைவில் குற்றபத்திரிகை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

இது
தீண்டாமை சுவர் என்ற புகார் எதுவும் இல்லை எனவும் , தீண்டாமை சுவரா என்பது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.மேலும்
போராடிய மக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது குறித்து விசாரிக்கப்படும் எனவும் கைது செய்யப்பட்டவர்களை சட்டரீதியாக விடுவிக்க மாவட்ட நிர்வாகத்திடம் அறிவுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். சுவர் குறித்து ஏற்கனவே புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காதது குறித்து மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் விசாரணை நடத்த உத்திரவிடப்பட்டுள்ளது எனவும் இது தொடர்பாக நகராட்சி
ஆணையருக்கு மெமொ கொடுக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் சுவர் கட்டுமான பணிகளை பொதுப்பணி மூலம் ஆய்வு செய்ய சொல்லி இருக்கின்றோம் என கூறிய அவர், தமிழகத்தில் பல இடங்களில் இது போன்ற சுவர்கள் இருப்பது குறித்து புகார்கள் வந்துள்ளது எனவும் அது குறித்தும் விசாரிக்கப்படும் எனவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைதலைவர் முருகன் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.