ETV Bharat / state

பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை மீது வழக்குப் பதிவு! - முன்னாள் ஐபிஎஸ் நிர்வாகி அண்ணாமலை மீது வழக்குப்பதிவு

கோவை : கரோனா ஊரடங்கை மீறி ஒன்று கூடியதாக, சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை, எஸ்.ஆர்.சேகர் உள்பட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Case registered against Former IPS Annamalai

author img

By

Published : Aug 28, 2020, 2:30 PM IST

Updated : Aug 28, 2020, 2:51 PM IST

கோவை ,காந்திபுரம் பகுதி, வி.கே.மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்திற்கு சமீபத்தில் பாஜகவில் இணைந்த முன்னாள் ஐபிஎஸ் அண்ணாமலை நேற்று (ஆக. 27) வந்தார். அப்போது அவருக்கு பேண்ட் வாத்தியங்கள் முழங்க மாலை, மணிமகுடத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சி மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, மாநில பொதுச் செயலாளர் ஜி.கே.செல்வகுமார், பாஜக கோவை மாவட்ட தலைவர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 50க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது.

அண்ணாமலையை வரவேற்க கூடிய கூட்டம்

இந்நிலையில், ஊரடங்கு விதிகளை மீறி கூட்டம் சேர்த்து, வரவேற்பு நிகழ்ச்சி நடத்தியதற்காக அண்ணாமலை, எஸ்.ஆர்.சேகர், நந்தகுமார், ஜி கே செல்வகுமார், கனகசபாபதி ஆகியோர் மீது காட்டூர் காவல் துறையினர் ஐந்து பிரிவுகளின் (ஊரடங்கு விதி மீறல், ஐபிசி செக்ஷன் 143, 341, 269, 285) கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க: விசாரணை வளையத்தில் எஸ்.வி.சேகர் - கைது செய்யப்படுவாரா?

Last Updated : Aug 28, 2020, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.