ETV Bharat / state

40 பேருக்கு கரோனா பரப்பியவர் மீது வழக்குப்பதிவு! - கரோனா பரப்ப காரணமான உரிமையாளர்

கோயம்புத்தூர்: ஒரே நாளில் 40 பேருக்கு கரோனா தொற்று பரவ காரணமாக இருந்த நகைப்பட்டறை உரிமையாளரை கோவை ஆட்சியர் ஆவேசத்துடன் திட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

rasamani
rasamani
author img

By

Published : Jul 7, 2020, 1:09 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம் செல்வபுரம், அசோக் நகர் பகுதிகளில் நேற்று (ஜூலை 6) ஒரே நாளில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில், பெரும்பாலான ஊழியர்களை வைத்து தொழில் நிறுவனங்கள் இயங்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆனால், கோவை செல்வபுரம் பகுதியில் இயங்கிவரும் ஒரு பட்டறையில் சுமார் 40க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். அவர்களில் 40 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டது. கரோனா தொற்று அதிகமாக பரவி வரும் செல்வபுரம் பகுதியில் ஆட்சியர் ராசாமணி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, கரோனா தொற்று பரவிய நகைப்பட்டறையில், முகக்கவசம், தகுந்த இடைவெளி முறையாக கடைப்பிடிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அப்போது ஆட்சியர் ராசாமணி நகைப்பட்டறை உரிமையாளரை கடுமையாக திட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.

கரோனா பரப்பியவரை திட்டும் ஆட்சியர்

அதில், "கரோனாவை வளர்த்துட்டு இருக்கீங்க. நாங்க இங்கே தலைகீழாக தொங்கிட்டு இருக்கோம். 40 பேருக்கு கரோனா பரவ காரணமா இருக்கீங்க. பாதுகாப்பு யார் கொடுப்பது, எதிலும் ஒரு விதிமுறை இல்லை" என ஆவேசமாக திட்டினார். இதன் பின்னர், அந்த நகை பட்டறைக்கு சீல் வைக்கவும், உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டார்.

இதனையடுத்து கரோனா பரவ காரணமாக இருந்த நகைப்பட்டறை உரிமையாளர் மீது செல்வபுரம் காவல்துறையினர் மூன்று வழக்குகளின் கீழ் பதிவு செய்தனர்.

இதையும் படிங்க: பத்திரப்பதிவுக்கான முன்பதிவு டோக்கனை இனி மாற்ற முடியாது - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.