நாடாளுமன்றத் தேர்தலுக்காக பொள்ளாச்சியில் திமுக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் 4ஆம் தேதி பரப்புரையில் ஈடுபட்டு வந்தார்.
அப்போது பாலியல் வழக்கில் சிபிசிஐடி விசாரணை நடத்திவருகிறது என்றும் விரைவில் சிபிஐ விசாரிக்கவுள்ளது என்றும் கூறினார். மேலும் இந்த விசாரணையை நேர்மையாக நடத்தமாட்டார்கள் என்றும் தமிழக முதல்வர் குறித்து அவதூறாக ஸ்டாலின் பேசியதாகவும் கூறி பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் 200 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக எந்தவித முகாந்திரமும் இல்லாமல் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தேர்தலில் ஆதாயம் தேடுவதற்காக பொய்யான தகவலை பரப்பி பேசியதாகவும் ஸ்டாலின் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.