தமிழ்நாட்டில் பல பகுதிகளில் உதவிக்காக ஏங்குவோரைக் கண்டறிந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற்றுத்தரும் பணியை தொழிலதிபர் கோபி கிருஷ்ணன் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக தற்போது நாடு முழுவதும் கரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொள்ளாச்சி அடுத்த சூளேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் கோபிகிருஷ்ணன் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட டாப்ஸ்லிப் மலைகிராமங்களில் வசிக்கும் 200 குடும்பங்களுக்கு 10 நாள்களுக்கு தேவையான அரிசி, பருப்பு, காய்கறி, எண்ணெய் ஆகிய பொருள்கள் அடங்கிய தொகுப்பை வழங்கினார்.
தற்போது இருக்கும் ஊரடங்கு நீடிக்கும் சூழ்நிலை வந்தால் இன்னும் பல உதவிகள் செய்ய தயாராக இருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சேவியர், மேலும் அனைத்து வனத்துறையினரும் கலந்து கொண்டனர்.