ETV Bharat / state

கார் மீது நேருக்கு நேர் மோதிய பேருந்து: விபத்தில் மூவர் நிலை கவலைக்கிடம் - bus accident in coimbatore

கோயம்புத்தூர்: காரும், பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பேருந்து ஓட்டுநர் உள்பட மூவர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கார் மீது நேருக்கு நேர் மோதிய பேருந்து
கார் மீது நேருக்கு நேர் மோதிய பேருந்து
author img

By

Published : Jan 5, 2021, 2:33 PM IST

கோயம்புத்தூரிலிருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற தனியார் பேருந்து சிட்கோ பகுதியில் உள்ள மேம்பாலத்தில் சென்றபோது எதிரில் வந்த காரில் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது.

இதில் பேருந்தின் முன்புறம் மேம்பாலத்தில் மோதி தொங்கும் நிலையில் நின்றது. எதிரே வந்த காரில் இருந்த அஜய் மற்றும் காஞ்சனா தேவி ஆகிய இருவரும் பலத்த காயங்களுடன் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்துக்குள்ளான பேருந்து
விபத்துக்குள்ளான பேருந்து

பேருந்தில் இருந்த பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில், ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போத்தனூர் காவல் துறையினர் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் பேருந்தை அங்கிருந்து அகற்றினர். விபத்து குறித்து போத்தனூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த விபத்து காரணமாக நீண்ட நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

நடவடிக்கை தேவை

கோயம்புத்தூர்- பொள்ளாச்சி சாலையில் செல்லும் தனியார் பேருந்துகள் அதிவேகமாக ஓட்டப்படுகிறது என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன.

கார் மீது நேருக்கு நேர் மோதிய பேருந்து

இதையும் படிங்க:ஜூஸ் என நினைத்து மண்ணெண்ணையை குடித்த சிறுவன் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.