வடகிழக்குப் பருவமழை தொடங்கியதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது. குறிப்பாக நேற்று கோவையில் இரவு முழுவதும் மழை கொட்டித்தீர்த்ததன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், நொய்யல் ஆற்றை கடந்து செல்லும் மதுக்கரை பகுதி குமிட்டிபதியில் உள்ள தரைப்பாலம் நீரில் அடித்து செல்லப்பட்டது. 10 அடி நீளத்திற்கு மேல் பாலம் அடித்து செல்லப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பாலம் கட்டி ஐந்து வருடங்களேயான நிலையில் பாலம் அடித்து செல்லப்பட்டது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்றாட வாழ்க்கைக்கு பயன்படுத்தப்பட்டு வந்த இப்பாலம் அடித்து செல்லப்பட்டதால், மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். அந்த இடத்தில் அரசு, தரமான பாலம் கட்டித்தரவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கூறிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'முரசொலி நிலம் பஞ்சமி நிலமல்ல' - ராமதாஸுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்!