ETV Bharat / state

கோவையில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் செங்கல் சூளைகள்!

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கோவை மாவட்டம் தடாகம் பகுதியில் செங்கல் சூளைகள் தொடர்ந்து செயல்பட தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் அனுமதி அளித்துள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் செங்கல் சூளைகள்; இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி

author img

By

Published : Jan 4, 2023, 11:16 AM IST

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி செயல்படும் செங்கல் சூளைகள்; இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி

கோவை: தடாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக செயல்படும் செங்கல் சூளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி 177 செங்கல் சூளைகள் செயல்பட தடை விதித்து உத்தரவிட்டிருந்தார்.

மேலும் அனைத்து துறைகளும் இணைந்து கூட்டு தணிக்கை குழு ஆய்வு மேற்கொண்டதில் 1 கோடியே 10 லட்சத்து 77276 கன மீட்டர் அளவு செம்மண் உரிய அனுமதியின்றி வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து 177 செங்கல் சூளைகளுக்கும் 374 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்திருந்தார்.

தடாகத்தை சேர்ந்த ராஜேந்திரன், மற்றும் இயற்கை ஆர்வலர் முரளிதரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடாகம் பகுதியில் சட்ட விரோதமாக செயல்படும் செங்கல் சூளைகளால் இயற்கை வளம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல் பொதுமக்கள் பல்வேறு தொற்று நோய்களுக்கு ஆளாகின்றனர். அதே சமயம் யானை வழித்தடம் மறிக்கப்படுவதோடு வனவிலங்குகள் சட்டவிரோதமாக மண் எடுக்க தோண்டப்பட்ட குழிகளில் விழுந்து உயிரிழப்பதாகவும் மனு தாக்கல் செய்தனர்.

இதனை அடுத்து வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 6.1.2021, 10.2.2021 மற்றும் 9.12.21-ம் தேதிகளில் செங்கல் சூளைகள் செயல்பட தடை விதித்ததை உறுதி செய்தது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் தடை உத்தரவினை எதிர்த்து 177 செங்கல் சூளை உரிமையாளர்கள், சென்னையில் உள்ள தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையரிடம் மேல்முறையீடு செய்தனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை ஆணையர் கடந்த டிசம்பர் 29ஆம் தேதி புதிய உத்தரவினை வழங்கி உள்ளார். அதில் செங்கல் சூளை உரிமையாளர்களிடம் நேரடி விசாரணையின் போது, 119 செங்கல் சூளைகளுக்கு ஆண்டு கனிம கட்டணம் , பதிவு கட்டணம் மற்றும் விண்ணப்பக் கட்டணம் ஆகியவை தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளின்படி செலுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும், செங்கல் சூளைகளுக்கு தேவையான மண்ணை பட்டா நிலங்களில் இருந்து மட்டுமே எடுத்ததாகவும், புறம்போக்கு நிலங்களில் இருந்து ஒருபோதும் எடுக்கவில்லை எனவும் உரிய அபராதம் விதிக்கும் பட்சத்தில் அதனை செலுத்தி விடுவதாகவும் சூளை உரிமையாளர்கள் தெரிவித்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதனையேற்று 164 செங்கல் சூளைகளுக்கு 3 லட்சம் முதல் 30 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அபராத தொகையினை தவணை முறையில் செலுத்த அனுமதி வழங்கலாம் எனவும் முதலில் இரண்டு லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்திவிட்டு, மீதி தொகையினை அடுத்த 12 மாதங்களுக்குள் தவணைகளாக செலுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

முதல் தவணை அபராத தொகை 2 லட்சம் செலுத்திய பின்னர், செங்கல் சூளைகளில் இருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள செங்கல்களை அப்புறப்படுத்தி கொள்ளலாம் எனவும், முதல் தவணை அபராதம் செலுத்திய செங்கல் சூளைகள் தொடர்ந்து இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது எனவும் ஆணையர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார். வரும் காலங்களில் மனுதாரர்கள் உரிய அனுமதி பெற்ற பிறகே செங்கல் சூளைகளுக்கு தேவையான மண்ணை வெட்டி எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தடாகம், வீரபாண்டி, சோமையம்பாளையம், நஞ்சுண்டாபுரம், பன்னிமடை ஆகிய கிராமங்கள் மலைப்பகுதி கிராமங்களாக இருப்பதால் "ஹாக்கா" தடையின்மை சான்று பெற்ற வேண்டும் எனவும், அதன் பின்னரே செங்கல் சூளைகளுக்கு தேவையான மண்ணை கனிமவளத்துறை அனுமதி பெற்று மண்ணை எடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி 177 செங்கல் சூளைகள் தொடர்ந்து செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: 'பொங்கல் பரிசில் தேங்காயும் வழங்குங்கள்' - தமிழக பாஜக விவசாய அணி கோரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.