கோயம்புத்தூர் மாவட்டம் சித்தாபுதூரில் கோகுல் தீக்கா (21) என்ற வடமாநில இளைஞர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் கோகுல் தீக்கா தனது வீட்டில் மீன் வறுவல் செய்தார். அப்போது, அவரது நண்பர் விகாஸ் என்பவர் அதில் ஒரு மீனை எடுத்து திண்றார்.
இதனால் கோபமடைந்த கோகுல் தீக்கா, விகாஸ்-வுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து விகாஸ் தனது நண்பர்களுடன் இணைந்து இரும்பு கம்பியால் கோகுல் தீக்காவின் தலையில் பலமாக தாக்கினார்.
இதில் பலத்த காயமடைந்த கோகுல் தீக்கா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக காட்டூர் காவல் துறையினர் விகாஸ் உட்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கரோனா நோயாளிக்கு பாலியல் வன்கொடுமை: மருத்துவ ஊழியர் கைது!