கோவை மாவட்டம் கொடிசியா பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக கட்சியின் பழங்குடியினர் அணி கோவை மாநகர மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், "பிரதமர் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு என்றும் பாதுகாவலராக இருக்கிறார். வருகின்ற ஒரு வருடத்திற்குள் கோவை மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கோவையில் உள்ள எஸ்டி மக்களுக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த இருக்கிறோம்.
தேசிய தலைமை மற்ற பணிகளில் கவனம் செலுத்திவருவதால் முதலமைச்சர் வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜெ.பி. நட்டா வரும்போது நிறைய விஷயங்களுக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும். அதிமுகவினர் பேசும்போது பார்த்து பேச வேண்டும்.
புகழேந்தி போன்றோர் எங்கள் கட்சியின் தலைவர் குறித்து பேசும்போது பார்த்து பேச வேண்டும். கூட்டணியைப் பொறுத்தவரை பாஜக மாநிலத் தலைவர் எவ்வித குழப்பமும் இல்லாமல் இருக்கிறார்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொள்ளையடித்த பணத்தை தமிழ்நாடு அரசு தேர்தல் நேரத்தில் வழங்கும் - அதிமுகவைச் சீண்டிய அண்ணாமலை