ETV Bharat / state

"கெளதமி பாஜகவில் இருந்ததால் புகார் எடுக்கவில்லை.. விலகியதும் எடுத்துக் கொண்டார்கள்" - வானதி ஸ்ரீனிவாசன்! - நவராத்திரி 9ம் நாள்

Gautami resign issue : நடிகை கௌதமி பாஜகவில் இருந்து விலகியதற்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது தான் காரணம் என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

Gautami resign issue
பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்: மாநில அரசை சாடிய வானதி சீனிவாசன்!
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 23, 2023, 2:26 PM IST

Vanathi Srinivasan Press Meet

கோயம்புத்தூர்: ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு, கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் பூஜை செய்தார். மேலும் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கான எம்எல்ஏ வாகனங்களுக்கும் பூஜைகள் செய்யப்பட்டன.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் கூறுகையில், "கடந்த ஆண்டு இதே நாளில் கோவை ஈஸ்வரன் கோயில் பகுதியில் பயங்கரவாதி ஒருவர் கார் சிலிண்டர் வெடிகுண்டு நிகழ்வு நடத்தினார். கார் வெடிகுண்டு குறித்து என்ஐஏ வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகரம் பாதுகாப்பற்ற சூழலில் இருப்பதாக தமிழக அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றோம். கோவை மாநகரம் பாதுகாப்பிற்காக இன்று காலை கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தமிழகத்தில் சட்ட ஒழுங்கு, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல், புகார் அளித்தாலும் பதிவு செய்து நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாகவும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் மாநில அரசின் மீது இருக்கிறது.

பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் ஏதேனும் சமூக வலைதளங்களும் கருத்து தெரிவித்தால் உடனடியாக காவல்துறை கைது செய்கிறார்கள். திமுகவினர் பிரதமர் மோடியை அவதூறாக பேசி வருகிறார்கள். ஆனால் திமுகவினரை கைது செய்யாமல் பாஜகவினரை கைது செய்து வருகின்றனர்.

திமுகவினர், பாஜக தொண்டர்களை தாக்குவது குறித்து தேசிய தலைமை குழு அமைக்கப்பட்டு பாதிக்கப்பட்ட பாஜக உறுப்பினர் குறித்து விசாரணை செய்து அறிக்கை சமர்பிக்கப்படும். திமுக அரசு பயங்கரவாதம் செய்வார்களை விட்டுவிட்டு அண்ணாமலை வீட்டில் அருகே இருந்த கொடி கம்பத்தை இரவோடு இரவாக அகற்றியது.

கௌதமி மீது எனக்கு அதிகளவு அன்பு இருக்கிறது. தீவிரமாக உழைக்கக் கூடிய பெண்மணி. நான் கூட கௌதமியை தேசிய அளவில் வேலை செய்வதற்காக அழைக்கும் போது, கௌதமி மாநில அளவிலேயே வேலை செய்து கொள்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், மாநில அளவிலான வேலைகள் இல்லாததால், என்னால் கௌதமியை சரிவர பார்க்க முடியவில்லை. கடந்த மாதம் கூட கௌதமி தொலைபேசியில் அழைத்து பேசினார்.

கௌதமி, தான் ஒரு நடிகை என்று நினைக்காமல் கட்சியின் அடிமட்ட தொண்டராக பணியாற்றியவர். கௌதமி அளித்த கடிதம் மனவேதனையாக இருக்கிறது. தன்னம்பிக்கையும், தைரியமிக்க பெண் கௌதமி. அவருக்கு எந்த உதவியும் செய்வதற்கு தயாராக இருந்தது கட்சி. அவர் இன்று விலகுவதாக கூறியது வருத்தம் அளிக்கிறது.

கட்சிக்காரர்கள் சட்டத்துக்கு மூலமாக யாரையும் பாதுகாக்க போவதில்லை. என்ன பிரச்சினை என்று முழுமையாக கூறியிருந்தால் அவருக்கு உதவி செய்ய எளிதாக இருந்திருக்கும். மாநில அரசிடம் புகார் கொடுத்தும், அவர் பாஜகவில் இருந்த காரணத்தினால் புகார் எடுக்கவில்லை. இன்று கட்சியை விட்டு விலகிய பிறகு புகாரை ஏற்றுக் கொண்டனர்.

மீண்டும் எப்போது வேண்டுமானலும் கௌதமிக்கு உதவி செய்ய தயாராக உள்ளேன். அவர் கேட்டால் உதவி செய்வேன். லியோ படம் பார்ப்பதற்கு நேரமில்லை, விடுமுறை நாட்கள் வாய்ப்பு இருந்தால் படத்தை பார்ப்பேன். சினிமா - அரசியல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பிரித்து பார்க்க முடியாத ஒன்று. நல்ல பொழுதுபோக்கான படத்தை பார்ப்பதில் தப்பில்லை" என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜகவில் இருந்து நடிகை கௌதமி விலகல்! - காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.