ETV Bharat / state

தமிழகத்தின் மீது பிரதமருக்கு சிறப்பு கவனம்: அண்ணாமலை - Political news

தமிழ்நாட்டின் மீது பிரதமருக்கும் பாஜக தேசிய தலைவருக்கும் சிறப்பு கவனம் உள்ளது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மீது சிறப்பு கவனம் செலுத்தும் இருவர்.. அண்ணாமலை பேச்சு!

author img

By

Published : Dec 28, 2022, 3:24 PM IST

கோவைக்கு வருகை தந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை ஒடிசாவுக்கு வழியனுப்பிய நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று (டிச.27) கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து கட்சி நிர்வாகிகளை சந்தித்த ஜே.பி.நட்டா, இன்று (டிச.28) கோவையிலிருந்து ஒடிசா புறப்பட்டுச் சென்றார்.

அவரை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன், சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் வழி அனுப்பி வைத்தனர். இதனையடுத்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, “கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மேட்டுப்பாளையம் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றி, தொண்டர்களுக்கு எழுச்சியையும் உத்வேகத்தையும் அளித்தார்.

நீலகிரி பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர்கள், வெற்றி வேட்பாளர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் அந்த விழா அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அன்னூரில் கிளைத் தலைவர் இல்லத்துக்குச் சென்று, அவரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்து வந்தார். இன்று ஒடிசா செல்கிறார்.

தமிழ்நாட்டின் மீது சிறப்புக் கவனம், பிரதமர் மோடி மற்றும் தேசியத் தலைவருக்கு உள்ளது. பாராளுமன்றத் தேர்தலுக்கான சுற்றுப்பயணத்தைக்கூட இங்கிருந்து தான் தொடங்கி உள்ளார். தேசிய தலைவர் எப்போது வந்தாலும் தொண்டர்களுக்கு உத்வேகமாக உள்ளது” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்ற தேர்தல் மட்டுமின்றி சட்டமன்றத் தேர்தலிலும் மாற்றம் நிகழும் - ஜே.பி. நட்டா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.