பாஜக சார்பில் வெற்றிவேல் யாத்திரை இன்று (நவ.6) தொடங்கி அடுத்த மாதம் திருச்செந்தூரில் முடிவடையும் என்று பாஜகவினர் அறிவித்திருந்தனர். ஆனால் கரோனா தொற்று பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்தது. இதனால் நேற்று(நவ .5) பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் இன்று(நவ.6) தமிழ்நாடு அரசு யாத்திரைக்கு சில தளர்வுகள் அளித்தது. அதில், நவம்பர் 16 ஆம் தேதிவரை 100 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளித்தது. அதனை தொடர்ந்து பாஜக மாநில தலைவர் முருகன் வெற்றிவேல் யாத்திரைக்கு புறப்பட்டார். இந்த அனுமதி போதாது என்று கூறி தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம் காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் நந்தகுமார், மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், இந்து முன்னணி மாநில பேச்சாளர் மூகாம்பிகை ஆகியோர் தமிழ்நாடு முழுவதும் வெற்றிவேல் யாத்திரைக்கு முழு அனுமதி வழங்க வேண்டும் என்று 12 அடி வேலுடன் முருகன் பாடல்களை பாடி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் காவல் துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: 'வெற்றி வேல் யாத்திரை': அனுமதி மறுத்த அரசு - பலத்தைக் காட்டும் முயற்சியில் பாஜக!