ETV Bharat / state

தமிழ்நாடு எம்.பி.,க்கள் இங்கு மட்டும்தான் புலி - மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தாக்கு!

தமிழ்நாடு எம்.பி.,க்கள் மாநிலங்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசுவதில்லை. அவர்கள் இங்கு மட்டும்தான் புலி என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்

மாநில பாஜக தலைவர் அண்ணாமலை
மாநில பாஜக தலைவர் அண்ணாமலை
author img

By

Published : Aug 15, 2021, 6:14 AM IST

கோயம்புத்தூர்: காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், ”ஆகஸ்ட் 16ஆம் தேதியிலிருந்து இருந்து மூன்று நாள்களுக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்கும் மக்கள் ஆசீர்வாத வேண்டி யாத்திரை நடைபெறுகிறது. முதல் நாள் யாத்திரை கோயம்புத்துரில் நடக்கிறது. அங்கிருந்து திருப்பூர் வழியாக இரண்டாம் ஈரோடு மாவட்டத்திலும், மூன்றாவது நாள் சேலம் நாமக்கல் பகுதிகளில் யாத்திரை செல்கிறது. இந்த யாத்திரையில் மக்களிடம் ஆசீர்வாதங்களை எல்.முருகன் பெறுகிறார்.

இடைவெளியை குறைக்க யாத்திரை

சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர் தற்போது பாஜக கட்சியால் கண்டெடுக்கப்பட்டு பல்வேறு பொறுப்புகளை வகித்து வருகிறார். இதுதான் உண்மையான சமூகநீதி. மத்திய அரசுக்கும், மத்திய அமைச்சருக்கும் மக்களுக்கும் இடைவெளி இருக்கக்கூடாது என பாஜக விரும்புகிறது. பொதுமக்கள் அவர்களது பிரச்னைகளை அமைச்சருக்கு போன் செய்து சொல்லும் வகையில் இருக்க வேண்டும். அதற்காகவே இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. வைரஸ் தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்றி வெளி அரங்கு நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறோம். தளர்வுகளுக்குப் பின்பு மக்கள் சந்திப்பு இருக்கும்.

திமுக அரசு தற்போது 100 நாளை நிறைவு செய்துள்ளது. இந்த 100 நாட்களில் தேர்தல் வாக்குறுதிகளை என்ன செய்தார்கள் எனச் சொல்வதை விட என்ன செய்திருக்கலாம் என சொல்லாம். தேர்தல் வாக்குறுதியை இன்னும் அதிகமாக நிறைவேற்றி இருக்கலாம். நல்ல ஆட்சியாளர்களை, அலுவலர்களை கொண்டு வந்துள்ளார்கள். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து இரண்டாவது அலையை கட்டுப் படுத்தி உள்ளார்கள்.

மத்திய அரசுடன் இணக்கமாக செல்ல செல்ல மக்களுக்கு பயன்கள் கிடைக்கும். பாஜக எதிர்க்கட்சிதான் ஆனால் எதிரி கட்சி அல்ல என்று நாங்கள் பலமுறை கூறியிருக்கிறோம்.

இந்த 100 நாட்களில் திமுக அரசு ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதனை தட்டிக் கேட்டுள்ளோம். பெட்ரோல் விலை 3 ரூபாய் குறைந்து உள்ளது மக்களுக்கு நல்லது அதில் மாற்றுக்கருத்து கிடையாது அதேசமயம் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிக்குள் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கிறது.

அதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. அதேசமயம் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டிகுள் கொண்டுவந்தால் மாநில அரசிற்கு வருவாய் பற்றாக்குறையும் ஏற்படும். அதற்கு மாநில அரசு தயாராக உள்ளதா?

உள்ளூர் புலி

தமிழ்நாடு எம்பிக்கள் உள்ளூரில்தான் புலி பாராளுமன்றத்தில் அவர்கள் பேசி நான் கேட்டதே இல்லை. தமிழ்நாட்டிற்கு தேவையான திட்டங்கள் குறித்து எதுவும் அவர்கள் பேசுவதில்லை. சம்பந்தம் இல்லாத விவசாய சட்டங்களுக்கு எதிராக பேசுகிறார்கள். எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பாராளுமன்றத்தை நடைபெற விடாமல் செய்துள்ளனர். மேகதாது அணை விவகாரம் இரு மாநிலங்களுக்கு இடையிலான பிரச்னை.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை நிறைவேற்றி உள்ளது வரவேற்கத்தக்கது. ஆகம சாஸ்திர விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி இல்ல மற்றும் இடங்களில் சோதனை நடத்தியது அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை. அவர் கோவைக்கு பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வந்துள்ளார் அவர் மீது குற்ற பத்திரிக்கை வந்த பின்பு நான் பதிலளிப்பேன்.

பழிவாங்கும் நடவடிக்கை லஞ்ச ஒழிப்பு சோதனை

உள்ளாட்சி தேர்தலில் எங்கள் கட்சியை வளர்க்க வேண்டும் என்று எண்ணுகிறோம். பல்வேறு தலைவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எஸ்.பி வேலுமணி மீதான சோதனை உள்ளாட்சித் தேர்தலில் எங்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. திமுகவை எதிர்த்து தினமும் பாஜக மட்டும்தான் போராடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் பாஜக ஆக்டிவாக உள்ளது. அதிமுக-பாஜக இடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கொள்கைகளுக்காக நாங்கள் ஒன்றாக இருக்கிறோம்.

சுதந்திர தினத்தன்று கோவையில் பொது இடங்களில் தேசியக்கொடி ஏற்ற கூடாது என்று தெரிவித்ததாக தகவல் வந்துள்ளது. டாஸ்மாக் கடையில் நிற்பதால் கரோனா வராது தேசியக் கொடியை ஏற்றினால் வந்துவிடுமா? எனத் தெரிவித்தார்

இதையும் படிங்க: ஈரோட்டில் காங்கிரஸ் கமிட்டியின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.