கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்காக மருத்துவர்கள், செவிலியர், காவல் துறையினர், தூய்மை பணியாளர்கள், தீயணைப்புத் துறையினர் ஆகியோர் விடுமுறையின்றி வேலை செய்துவருகின்றனர். அவர்களுக்கு சமூகத்திலும், இணையத்திலும் பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளன.
இந்நிலையில் கோவை நரசிம்மன்நாயக்கன் பாளையத்தில் பாஜக மாவட்ட செயலாளர் விவேகானந்தன் தலைமையில் பேரூராட்சியில் பணியாற்றும் அரசு அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு மரியாதை செய்யப்பட்டது.
அவர்களது காலில் மலர்களைத் தூவி பாத பூஜை செய்தனர். கற்பூர தீபம் காட்டியும் அவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
அதேபோல், நாமக்கல் ஏ.எஸ்.பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜா, சுமதி தம்பதி தங்களது பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டுவரும் 10க்கும் மேற்பட்டவர்களை கெளரவப்படுத்தினர். இதில் தூய்மை காவலர்களுக்கு பாத பூஜை செய்து, அவர்களுக்கு மாலை அணிவித்து வேட்டி, சேலைகளை இலவசமாக வழங்கினர்.
இதையும் படிங்க: ‘மக்களுக்காக நாங்க இருக்கோம்’- கரோனாவை விரட்டியடிக்கும் தூய்மைக் காவலர்கள்!