ETV Bharat / state

தேர்தலில் வெற்றிபெற இந்திய ராணுவ வீரர்களை பாஜக அரசு கொன்றது - சீமான் குற்றச்சாட்டு - சீமான்

கோவை: தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காக இந்திய ராணுவ வீரர்களை பாஜக அரசு கொன்றதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

BJP government kills Indian soldiers to win election NTK Seeman
தேர்தலில் வெற்றிப்பெற இந்திய இராணுவ வீரர்களை பாஜக அரசு கொன்றது - சீமான்!
author img

By

Published : Feb 22, 2020, 6:51 PM IST

மத்திய அரசின் புதிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து கோவை ஆத்துப்பாலத்தில் இஸ்லாமிய மக்கள் நடத்திவரும் போராட்டத்தில் கலந்துகொண்டு கண்டனவுரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றிபெற இந்திய ராணுவ வீரர்களை பாஜக அரசு கொன்றது - சீமான்

அப்போது பேசிய அவர், "மத்திய அரசு மக்களைப் பிரிக்கவே இதுபோன்ற சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் ஆகிறது என்கிறார்கள், இப்போது நம்மிடையே வந்து யார் இந்தியர்கள் என்று கேட்கிறார்கள். யார் இந்தியர்கள் என்று பாஜகவிற்கு தெரியாதா?

‘நான் இந்த நாட்டின் பூர்வீகக் குடி, நான் இங்குதான் இருந்தேன், மார்க்கம்தான் என்னிடம் வந்தது, ஆனால் நீ அப்படி இல்லை, நீங்கள் எங்கிருந்தோ வந்தவர்கள்’ எனப் போற்றுதலுக்குரிய அண்ணன் பழனிபாபா சொன்னதைப் போல என் நிலத்தில் வந்து குடியேறிய நீ சொந்தக் குடிகளாகிய எங்களிடம் குடியுரிமை கேட்கிறாய். எவ்வளவு திமிர் இருந்தால் இப்படி ஒரு கேள்வியை கேட்பார்கள்.

இதில் எது குடியுரிமைக்கான சான்று? பிறப்புச்சான்றிதழ், வங்கி கணக்கு, கல்விச் சான்றிதழ், சொத்து உடமைகள், வீட்டுப் பத்திரம், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, கடவுச்சீட்டு, ஆதார் அட்டை. இதில் எதுவுமே இல்லை என்றால் வேறு எதுதான் குடியுரிமைக்கான சான்று? குடியுரிமை சான்றிதழ் என்றால் என்ன என்று பாஜக தெளிவுப்படுத்த வேண்டும்.

தூய காற்றை வாங்க 4,050 கோடி நிதி ஒதுக்கிய இந்த நாட்டைப் போல வேறு ஒரு நாட்டை நாம் பார்க்க முடியுமா? 130 கோடி மக்களைக் கொண்டுள்ள இந்தியத் துணைக்கண்டம், ஃபிரான்சிடமிருந்து நாட்டின் பாதுகாப்புக்கு ரஃபேல் என்கிற போர் விமானத்தை வாங்கியது, அதில் ஊழல். அதை வாங்கிய ஆவணங்களைக் கொடு என்று உச்ச நீதிமன்றம் கேட்டபோது அது பாதுகாப்புத் துறை அலுவலகத்திலிருந்து காணாமல்போய்விட்டது என்ற பதிலே கிடைத்தது. எங்களது ஆவணங்கள் காணாமல் போய்விட்டது என இப்போது நாங்கள் சொல்கிறோம்.

இனி எந்தக் கட்சிக்கும் சின்னங்களே இருக்கக் கூடாது. தற்போது பாஜக அரசு கொண்டுவரும் பெரும்பாலான சட்டங்களை அப்போதே கொண்டுவர காங்கிரஸ் கட்சி முயன்றது. ஆனால் அப்போது காங்கிரசிடம் பெரும்பான்மை இல்லாததால் அதை நிறைவேற்றவில்லை. அதை தற்போது பாஜக நிறைவேற்றிவருகிறது. இந்த இரண்டும் நம்மை பொறுத்தவரை ஒன்றுதான். இறுதியாக காங்கிரஸ், பாஜக இந்த இரண்டு தேசியக் கட்சிகளும் நம்மை வாக்குக்காகதான் பயன்படுத்திக்கொண்டுள்ளன.

நடந்து முடிந்த தேர்தலில் வெற்றிபெற வாக்குகளுக்காக இந்திய ராணுவ வீரர்களை இந்த அரசு கொன்றுவிட்டது என நான் வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டுகிறேன். சந்தேகம் இருந்தால் மகாராஷ்ரா மாநில முன்னாள் ஐஜி எழுதிய ‘கர்க்கரெயை கொன்றது யார்?’ என்ற நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும்.

அறவழியில் போராடிய மக்களைத் தடியடி நடத்திக் கலைப்பது, வலுக்கட்டாயமாக அடித்துக் கலைப்பது என்பது கொடுங்கோண்மை. அந்தச் செயல் மிகுந்த கண்டனத்துக்குரியது. குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஓரிடத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது தேவையற்ற தடியடி நடத்தி தமிழ்நாடு முழுக்க இந்தப் போராட்டத்தை விரிவுபடுத்திவிட்டார்கள். நாட்டின் பூர்வீக குடிகள் என்ற திமிரோடு துணிவோடு தொடர்ச்சியாகப் போராடுவோம், நம்முடைய போராட்டம் நிச்சயம் வெல்லும்" என்றார்.

இதையும் படிங்க : ரஜினியை யாரென்று கேட்ட இளைஞர், திருட்டு வழக்கில் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.