ETV Bharat / state

’வாக்குச்சாவடிக்கு வெளியே பாஜக டோக்கன் கொடுக்கிறது’ - கமல் குற்றச்சாட்டு

கோவை தெற்கு தொகுதியில் பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா டோக்கன்கள் விநியோகித்து வருவதாக மக்கள் நீதி மய்யம் தலைவரும், அத்தொகுதி வேட்பாளருமான கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

bjp distribute token in covai south constituency alleged mnm kamalhassan

author img

By

Published : Apr 6, 2021, 1:53 PM IST

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் சென்னையில் இன்று காலை வாக்களித்துவிட்டு, அவர் போட்டியிடும் கோவை தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியை பார்வையிடச் சென்றார்.

கோவை வந்த அவர் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட கெம்பட்டி காலனி பகுதிக்கு சென்று வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். அவருடன் அவரது மகள் ஸ்ருதிஹாசனும் வந்திருந்தார்.

வாக்குச்சாவடிக்கு வெளியே டோக்கன் விநியோகிக்கும் பாஜக

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கமல், "கோவை தெற்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பாஜகவினர் பணப்பட்டுவாடா செய்ய டோக்கன்கள் தருகின்றனர். இதுகுறித்து தேர்தல் அலுவலர்களிடம் புகார் அளிக்க உள்ளேன். பணப்பட்டுவாடா புகார்கள் அதிகரித்தால் மறுவாக்குபதிவு செய்ய வலியுறுத்துவோம். நடிகர் விஜய் சைக்கிளில் சென்று வாக்களித்தது அவரது தனிப்பட்ட உரிமை" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.