ETV Bharat / state

'கல் வீசியது சிறிய சம்பவம்தான்’: பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன்

கோயம்புத்தூர்: செருப்பு கடையின் மீது பாஜகவினர் சிலர் கல் வீசி தாக்கியதை சிறிய சம்பவம் என பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

bjp vanathi
வானதி சீனிவாசன்
author img

By

Published : Apr 1, 2021, 9:53 PM IST

கோயம்புத்தூர் காந்திபுரம் பகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி. ஆன்மிக அரசியல் என்ற மக்கள் விரும்பும் அரசியலை ரஜினிகாந்த் கைவிட்டது ஏமாற்றம்.

யாகவாராயினும் நா காக்க.. என திருக்குறளை உதாராணம் காட்டிய கமல் ஹாசனுக்கு, இந்த திருக்குறள் துக்கடா அரசியல்வாதி என என்னை விமர்சனம் செய்யும்போது ஏன் நியாபகம் வரவில்லை. மைக் வேலை செய்யாததால் கமல் ஹாசன் டார்ச் லைட்டை வீசியது அவருக்கு பொறுமை, பக்குவம் இல்லை என்பதைக் காட்டுகிறது.

இதிலிருந்து அவர் சிறிய ஏமாற்றத்தைக்கூட தாங்கி கொள்ள முடியாதவர் என தெரியவருகிறது. வெற்றி, தோல்வி எதை தந்தாலும், மக்களுக்கு உழைப்பதுதான் அரசியலுக்கு அடிப்படை. 66 வயதான தனக்கு வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கும் கமல் ஹாசன், இன்னும் பயிற்சி எடுக்க வேண்டும்.

திமுகவினர் காவல் துறை, பொதுமக்களை மிரட்டுகின்றனர். வன்முறை அரசியலில் திமுகவினர் ஈடுபடுகின்றனர். மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது. ட்விட்டர் அரசியல்வாதி கமல் ஹாசன், நேரடியாக எத்தனை நாள் மக்களோடு இருந்துள்ளார் களத்தில் நின்று கமல் ஹாசன் என்ன செய்தார்?

கோயம்புத்தூர் அமைதிப் பூங்காவாக நிலவ வேண்டும் என அனைத்து தரப்பினரும் முயற்சிக்கின்றனர். பாஜக அத்தனை தரப்பு மக்களுக்குமான கட்சி. திமுக ஆட்சியில்தான் கோவையில் குண்டு வெடிப்புகள் நடந்தன. அதற்காக திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்.

உத்தரப் பிரதேச முதலமைச்சர் பங்கேற்ற ஊர்வலத்தின்போது செருப்புக்கடையில் கல் வீசியது சிறு சம்பவம். அதை ஊதி பெரிதாக்குவது யார்? பெண்களை இழிவாக பேசிய உதயநிதி ஸ்டாலின், திண்டுக்கல் லியோனியை திமுக கண்டித்ததா? என்றார்.

இதையும் படிங்க:துறையூர் அதிமுக வேட்பாளர் இந்திரா காந்திக்குக் கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.