கோயம்புத்தூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக அனைத்துக் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 11) கோயம்புத்தூர் மாநகராட்சி செல்வபுரம் பகுதி, 76ஆவது வார்டில், பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இவர் நேற்று முந்தினம் (பிப்ரவரி 10), அப்பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபடும் போது, அடையாளம் தெரியாத சில நபர்கள், கல்வீச்சி நடத்தியுள்ளனர். இதனால் கார்த்திகும், தொண்டர் ஒருவர் காயமடைந்துள்ளனர்.
இதனால் நேற்று (பிப்ரவரி 11) கார்த்திக் மற்றும் பாஜக தொண்டர்கள் 10-க்கும் மேற்பட்டோர் ஹெல்மெட் அணிந்து கொண்டு பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தனர். இதில், நிகழ்ந்த சம்பவத்தையும், வாக்குறுதிகளையும் கூறி வாக்கு சேகரித்தனர்.
இதையும் படிங்க: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முடிவெட்டும் தொழிலாளி தீவிர வாக்குச் சேகரிப்பு