ETV Bharat / state

BJP vs NTK: "நாம் தமிழர் கட்சியை விட 30% அதிக வாக்கு பெறுவோம்" - சீமானுக்கு அண்ணாமலை சவால்!

BJP Annamalai challenge to naam tamilar katchi seeman: "வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விட 30 சதவீத வாக்குகள் அதிகமாக பெறுவோம்" என சீமானுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சவால் விடுத்துள்ளார்.

BJP Annamalai challenge to naam tamilar katchi seeman
சீமானுக்கு அண்ணாமலை சவால்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 2, 2023, 2:28 PM IST

Annamalai Speech

கோயம்புத்தூர்: கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பாஜக முழுமையாக வரவேற்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சனைகள் வருகிறது.

இதனால் கொள்கை ரீதியாக முடிவுகள் எடுக்க முடியவில்லை. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வட கிழக்கு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இராணுவ பாதுகாப்பு குறைக்கப்படுகிறது. கோடிக்கணக்கான நபர்கள் தேர்தல் நடத்த பயன்படுத்தப்படுகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக, தமாகா போன்ற கட்சிகள் வரவேற்றுள்ளன.‌ ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற உன்னதமான திட்டத்தை தமிழக மக்கள் வரவேற்க வேண்டும்.

அதானிக்கு நாம் ஆதரவு தர வேண்டிய அவசியமில்லை. அதானி என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுக்கிறார்கள். ஜார்ஜ் சோரேஸ், மோடி மற்றும் இந்தியா மீது வன்மம் கக்கும் நபர். ஜார்ஜ் சோரேஸ் இந்தியாவின் எதிரி. ஜார்ஜ் சோரேசின் ஊதுகுழலாக ராகுல் காந்தி நேற்று பேசினார். இந்தியாவிற்கு எதிரான சக்திகள் இந்தியா வளர்ச்சியை சீர்குலைக்க முயற்சிக்கின்றன.

தமிழ்நாட்டிற்கு எதுவும் மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என முதலமைச்சர் பொய் சொல்லியுள்ளார். 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு தந்துள்ளதை 13 பக்க வெள்ளை அறிக்கையாக தந்துள்ளோம். மத்திய அரசு அதிக பணம் வந்த மாநிலம் தமிழ்நாடு. ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் இந்தியா கூட்டணியில் முன்னணியில் நிற்கிறார்கள்.

இந்தியா கூட்டணியை மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெருவோம். ஒரே நாடு ஒரே தேர்தல் பல நாடுகளில் உள்ளது. இதனால் அதிகாரிகள் மீதான சுமை குறையும். இது இந்தியா வளர்ச்சியை அதிகப்படுத்தும். இதனை எதிர்ப்பவர்கள் சுயநலவாதிகள். ‌குடும்ப அரசியலை ஆதரிப்பவர்களாக இருப்பார்கள். இதனால் தேர்தல் செலவு குறையும். நான் பேசாத செய்திகளை பேசியதாக பத்திரிகைகள் போடுகிறார்கள்.‌

எந்த காரணத்திற்காகவும் ஒரு கட்சியை தரம் தாழ்த்தி, தவறாக பேசி கட்சியை வளர்க்க வேண்டும் என நினைக்க மாட்டேன். நான் நேரடியாக கருத்து சொல்லும் நபர். பின்முதுகில் நான் பேசுவதில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. திமுகவினர் பாஜக நபர்களை குறிவைத்து கூலிப்படை வைத்து கொலை செய்கின்றனர். திமுக கூலிப்படை ஏவி விடுகிறது. மாணவர்களுக்கு காலை உணவு தந்த இஸ்கான் கிச்சனை திமுக நிறுத்தியது ஏன்?.

மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. காலை உணவு திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன் என திமுக சொந்தம் கொண்டாடமால் சிறப்பாக செயல்படுத்த வேண்டும். சீமானின் சவாலுக்கு பாஜக தயார், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் என்ன? 30 சதவீதம் வாக்குகளை கூடுதல் வாங்கி காட்டுகிறோம். சீமான் தனியாக நிற்பது கொள்கை அல்ல. யாரும் சேர்க்கவில்லை என்பது தான் காரணம். எங்களுக்குள் கட்சி அடிப்படையில் முரண் இருந்தாலும், திமுகவை எதிர்க்க சீமான் வேண்டும்.

கோவை கார் குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்றது தமிழக காவல்துறைக்கு கரும்புள்ளி, திமுகவிற்கும் கரும்புள்ளி. கோவை ஆபத்தில் இருந்து முழுமையாக தப்பிக்கவில்லை. நேரடியாக மத்திய அரசுடன் தொடர்புடைய நபர் உறுப்பினராக வேண்டும். தீவிரவாத செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி முடிவு செய்தால் ஆளுநர் கையெழுத்திட கூடாது. திமுக வாயில் வடை சுடுகிறார்கள்.

சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தரப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. கூச்சம் இல்லாமல் பொய் கோல்ட் மெடல் திமுகவிற்கு தர வேண்டும். விஷ்வ கர்மா யோசனா திட்டத்தை கி.வீரமணி தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை. அது குலக்கல்வி அல்ல. நாடாளுமன்ற தேர்தலில் 39-க்கு 39 தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.

25 ஜெயிக்கும் அளவிற்கு கட்சி தொண்டர்கள் தயாராக வேண்டும் என்பது எனது ஆசை. நாடாளுமன்ற தேர்தலில் 25 இடங்களில் வெற்றி பெறும் அளவிற்கு தயாராக உள்ளோம். அத்தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டால் அவர்களை வெற்றி பெற செய்வோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு தஞ்சையில் கிருஷ்ண தரிசன கண்காட்சி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.