மகளிர் தினத்தை முன்னிட்டு 30க்கும் மேற்பட்ட பெண்கள் கியர் பைக்கில் பேரணி நடத்தினர். இந்தப் பேரணியானது கோயம்பத்தூரில் உள்ள பீளமேட்டில் தொடங்கி பல்லடம் வரை நடைபெற்றது.
பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள், அச்சம் இல்லாதவர்கள் போன்றவற்றை முன்மொழியும் வகையில் இப்பேரணி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதில் கலந்துகொண்ட பெண்கள் அனைவரும் தலைகவசம் அணிந்து கியர் பைக் ஓட்டிச்சென்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் ஜெயந்தி, “பெண்கள் இந்த சமூகத்தில் அச்சமில்லாதவர்கள் என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் பேரணி நடைபெற்றது. பெண்கள் பலருக்கும் கியர் பைக், கார் போன்றவை ஓட்ட வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் பெண்கள் வீட்டில் அதற்கு சம்மதம் தர மறுக்கின்றனர்.
அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் பேரணியை தொடங்கியுள்ளோம். இதுபோன்ற விழிப்புணர்வு பேரணி தொடர்ந்து நடைபெறும்’’ என்றார்.
இதையும் படிங்க: சாலை நடுவே மின் கம்பம்: மாற்றி அமைக்க கோரிக்கை