இன்று (ஏப். 25) முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ரயில்வே சேவைகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்ந நிலையில் கோவை ரயில் நிலையத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பகார் செல்ல குழந்தைகளுடன் காத்திருந்தனர்.
உணவகங்களில் குறிப்பிட்ட நேரத்தில் பார்சல் மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான உணவகங்கள் திறக்கப்படாமல் இருந்துள்ளன. எனவே ரயில் நிலையத்தில் காத்திருக்கும் மக்களுக்கு உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.
மாலை 4 மணிக்கு பிகார் செல்லும் ரயில் என்பதால் அதுவரை ரயில் நிலையத்தின் முன்பே காத்திருக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்ப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் மாட்டிக்கொண்டிருக்கும் மக்களுக்கு காலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளுக்கு மட்டுமாவது உணவு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இதையும் படிங்க:18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கரோனா தடுப்பூசி - பிரதமர் மோடி உறுதி