ETV Bharat / state

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம்!

author img

By

Published : Dec 19, 2019, 3:23 AM IST

கோவை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 36ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய அமைச்சர் அன்பழகன், கொங்கு மண்டலத்தின் மணிமகுடம் பாரதியார் பல்கலைக்கழகம் எனவும், ஆயிரம் ஏக்கரில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இயங்கி வருவதாகவும் கூறினார்.

மேலும், உலகளவில் கல்வியை வழங்குவதில் மூன்று முக்கிய நாடுகளில் இந்தியா இடம்பெற்றுள்ளதற்கு தமிழ்நாடும் முக்கிய காரணம் என்று அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

பின்னர், பாரதியார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வழங்கினார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

நிகழ்ச்சிக்கு முன்னதாக, பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கு முன் ஓன்று கூடிய பாரதியார் பல்கலைக்கழக மாணவர்கள், குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: தி.மலை கிளி கோபுரத்தில் திரும்பப் பெறப்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்பு

Intro:பாரதியார் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்..Body:கோவை பாரதியார் பல்கலைகழக
36வது பட்டமளிப்பு விழா கவர்னர் பன்வாரிலால் புரோகித் தலைமையில் இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கவர்னர் பங்கேற்க வருவதற்கு சில நிமிடங்கள் முன்பாக, பட்டமளிப்பு விழா நடைபெறும் அரங்கு முன் ஓன்று கூடிய பல்கலை கழக மாணவர்கள்
குடியுரிமை சட்ட திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

பாரதியார் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்த இருப்பதாக ஏற்கனவே தகவல் கிடைத்து இருந்ததால் ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை கைது செய்ய முயன்றனர்.ஆனால் கைதுக்கு உடன்படாமல் மாணவ, மாணவிகள் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கங்கள் எழுப்பினர்.

இந்த மசோதா மக்களை பிளவு படுத்தும் விதமாக இருப்பதாகவும் இந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்து சென்று கைது செய்தனர்.

மத்திய அரசின் கவனத்திற்கு கோரிக்கைகள் செல்ல வேண்டும் என்பதற்காக கவர்னர்வருகையின் போது இந்தபோராட்டம் நடத்தப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்ட 40 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை காவல் துறையினர் கைது செய்தனர்.கவர்னர் வருகைக்கு சில நிமிடங்கள் முன்பாக விழா அரங்கு முன்பாக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பல்கலைகழக வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது...Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.