ETV Bharat / state

பாசன வசதிக்காக நாளை பவானிசாகர் அணை திறப்பு - முதல் போக நன்செய் பாசனத்திற்கு தண்ணீர்

சென்னை: பவானிசாகர் அணை பாசன வசதிக்காக நாளை திறக்கப்படுவதாக  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Bavani sagar dam opening for farming said tamilnadu Cm Edappdi palanisamy

author img

By

Published : Jun 30, 2020, 4:35 PM IST

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல்போக நன்செய் பாசனத்திற்கு, தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

இவர்களின் கோரிக்கைகளை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம்பெறும் நிலங்களுக்கு வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அக்டோபர் 28ஆம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு, மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி வட்டம் ஆகியவற்றில் உள்ள 15 ஆயிரத்து 743 ஏக்கர் நிலங்கள் பாசனவசதி பெறும். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, உயர் மகசூல் பெறுமாறு கேட்டுக் கொள்வதாக" குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 40 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாத கடனா அணை: 9 ஆயிரம் ஹெக்டேர் விவசாயம் பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.