தமிழ்நாடு காவல்துறை சார்பில் பெண்கள் ஆபத்து, அவசர காலங்களில் தங்களை தற்காத்துகொள்ளவும், தாங்கள் இருக்குமிடத்தை காவல்துறைக்கு தெரியப்படுத்தவும் காவலன் என்னும் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இச்செயலி குறித்த விளக்கம் தமிழ்நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் கோவை மாவட்டம் காருண்யா காவல் நிலையத்துக்குட்பட்ட இருட்டுப்பள்ளம் அரசு நடுநிலைப்பள்ளியில் காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் காவலன் செயலி பயன்படுத்தும் முறை, அவசர காலங்களில் எவ்வாறு பயன்படுத்துவது, எப்பட்ட சூழ்நிலையில் பயன்படுத்த வேண்டும் உள்ளிட்டவைகள் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. மாவட்ட உதவிக்காவல் ஆய்வாளர் மாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நாற்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: பெண்களைக் காக்கும் 'காவலன்' செயலி: களத்தில் இறங்கிய சென்னை காவல் ஆணையர்!