கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சுப்ரமணியன் (52), கடந்த சில மாதங்களாக கோவை மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வருகிறார். மாநகராட்சி வழங்கிய ஒலிப்பெருக்கிகள் மற்றும் சாதனங்களை ஆட்டோவில் மாட்டிக்கொண்டு கரோனா தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, ஆட்டோவில் மாட்டியிருந்த மாநகராட்சி சார்பில் வழங்கப்பட்ட ஒலிப்பெருக்கி மற்றும் அதன் சாதனங்கள் காணாமல் போயுள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் நேற்று குடிபோதையில் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். ஒலிபெருக்கி காணாமல் போனதுக்காக ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல...
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104