கோவை, சரவணம்பட்டி அருகே கடந்த ஜூலை மாதம் 30ஆம் தேதி அன்று சூர்யா என்பவர் தனது பிறந்தநாளை பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பான வழக்கில் ஏற்கனவே சுந்தரம், சதீஷ்குமார் ஆகிய இருவரை சரவணம்பட்டி காவல் துறையினர் கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
![பட்டா கத்தியில் கேக் வெட்டியவர்கள் கைது](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4377125_558_4377125_1567944359470.png)
இந்நிலையில், தற்போது சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த கனி அமுதன், சூரிய மகேஷ்வரன், ராஜ ரத்தினம் ஆகிய மூவரை சிவானந்தபுரம் மாருதி நகரில் வைத்து சரவணம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், கேக் வெட்ட பயன்படுத்திய மூன்று கத்தியும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
![கேக் வெட்ட பயன்படுத்திய கத்திகள், கத்திகள் பறிமுதல்,](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4377125_534_4377125_1567944319794.png)
தற்போது கைது செய்யப்பட்டுள்ள கனி அமுதன் மீது கடந்த 2013ஆம் ஆண்டு ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு உள்ளது என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.