ETV Bharat / state

”காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல, திராவிட மாடல் தான்” - ஆ.ராசா - தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம்

காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல, திராவிட மாடல் தான் என மக்களவை உறுப்பினர் அ.ராசா தெரிவித்துள்ளார்.

”காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல, திராவிட மாடல் தான்” - ஆ.ராசா

author img

By

Published : May 16, 2022, 6:23 AM IST

கோயம்புத்தூர்: காளப்பட்டியில் உள்ள தனியார் அரங்கில் "திராவிட மாடல் தான் தேசிய மாடல்" என்ற தலைப்பில் பயிலரங்கம் நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மக்களவை உறுப்பினர் அ. ராசா, மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”மனிதனை மனிதனாக நடத்துவது திராவிட மாடல். குஜராத்திலும் மின்வெட்டு உள்ளது தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன, தமிழ்நாட்டில் தடையில்லா மின்சாரம் வழங்கி வருவது திராவிட மாடல். ஒன்றிய திட்டத்தின் மூலம் கிடைக்க வேண்டிய தடங்களால் சிலநாட்கள் மின்வெட்டு இருந்தது. பல்வேறு மாநிலங்களின் முதல்வர்களும் நம்முதல்வரின் ஆட்சியை பார்த்து பாராட்டி வருகின்றனர். அதுதான் நம் முதல்வரின் திராவிட மாடல்” என தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து சிறப்புரையாற்றிய மாநில திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன், “அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியது போல சகமனிதனை மனிதனாக நினை என்று தான் கூறி வருகிறோம். அதுதான் நமது அடிப்படை. ஒன்றிய அரசு அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு எவ்வளவு தடைகளை ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

”காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல, திராவிட மாடல் தான்” - ஆ.ராசா
”காமராஜர் கொண்டு வந்தது காங்கிரஸ் மாடல் அல்ல, திராவிட மாடல் தான்” - ஆ.ராசா

முதலில் கொள்கை ரீதியாக எதிர்ப்பு. இரண்டவது ஆளுநர் மூலம் தடையை ஏற்படுத்தி வருகின்றனர், மூன்றாவதாக ஒன்றிய அரசிடமிருந்து வரவேண்டி நிதியை தராமால் தடையை ஏற்படுத்துகின்றனர். சிலருக்கு ஒன்றியம் என்றால் எரிகிறது. அரசியல் அமைப்புச் சட்டத்தில் உள்ளதை தான் நாம் சொல்கிறோம்.

ஒன்றிய அரசு பத்தாண்டுகளில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. இலவச வீட்டு மனை கட்டுவதற்கு ஒன்றிய அரசு 30 விழுக்காடு மாநில அரசு 70 விழுக்காடு நிதி தருகிறது. இந்திராகாந்தி பென்ஷன் திட்டத்தில் ரூ.1000-த்தில் ரூ.200 மட்டுமே ஒன்றிய அரசு கொடுக்கிறது, ரூ.800 மாநில அரசு கொடுக்கிறது.

மாநிலங்களில் அதிகமாக வரிவசூல் செய்வது மத்திய அரசு. ஆனால் மாநில அரசை வரி குறைப்பு செய்ய வலியுறுத்துகிறது. இது எந்த விதத்தில் நியாயம்?. விலைவாசியை குறைக்க நாம் வலியுறுத்தினால் செய்யும் வேலையை மட்டும் செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள் என நிதி அமைச்சர் தெரிவிக்கிறார். ஒரு வருடத்தில் மட்டும் இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 52 ஆயிரம் பேர் பலனடைந்துள்ளனர். பெண்களுக்கு இலவச பயணம் மூலம் பணம் மிச்சப்படுத்தப்படுகிறது. பணம் படைத்தவர்கள் மட்டும் வளரும் மாடல் நமது மாடல் அல்ல” எனத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய எம்பி. ஆ.ராசா, “தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் திராவிட மாடல் பேசப்படுகிறது.
இதற்கு காரணம் முதல்வர் ஸ்டாலின். செந்தில் பாலாஜி அதிமுகவில் இருக்கும்போதே ஆட்சி பணியில் சிறப்பாக இருப்பார் என்பதை நான் அறிவேன். திராவிடத்தை காப்பாற்ற கடவுள் நம்பிக்கை உள்ள செந்தில்பாலாஜி இந்த கருத்தரங்கை நடத்துவதை பாராட்டுகிறேன்.

பூனா வில் கருத்தரங்கிற்கு நான் சென்றபோது பைலட் செல்ஃபி எடுக்க முற்பட்டார் அப்போது அவரிடம் விசாரித்தபோது அதற்கு பைலட் 2ஜி என தெரிவித்தார் அது என்னை எங்கே வரை கொண்டு விட்டுள்ளது பார்த்தீர்களா” என நகைச்சுவைத்தார்.

மேலும், “வருணாசிரமத்தை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி நடத்துவது தான் ஆரிய மாடல். வருணாசிரமத்தை ஆட்சி அதிகாரத்தில் கொண்டுவந்து திணித்தார்கள். கல்வியை மறுத்த மதம் சனாதன மதம் இந்து என்ற பெயரைக் கொடுத்தது ஆங்கிலேயர்கள். பெண்களை வீட்டில் இருக்க சொன்னவர்கள் ஆரியர்கள் . சுதந்திரம் அடைந்தபோது இந்தியாவை இந்து நாடாக மாற்ற முயன்றவர்கள் ஆரியர்கள். அதை நேருவும் அம்பேத்கரும் உடைத்தனர்.

பெண்களுக்கு முதன்முதலில் வாக்குரிமை கொடுத்தது திராவிடம். ஆரிய மாடலையும் திராவிட மாடலையும் கவனித்து பாருங்கள்.
பெரியாரின் நோக்கம் கடவுள் எதிர்ப்பு மட்டுமல்ல. பெண்ணியம், சாதி ஒழிப்பு, பெண்களுக்கு சொத்தில் பங்கு. சனாதனத்தை எதிர்த்தவர்கள் ஊருக்கு வெளியே அனுப்பப்பட்டனர். அதுவே சேரிகளாக மாறியது. 1996 ஆம் ஆண்டில் கலைஞர் சமத்துவபுரத்தை உருவாக்கினார்.

கலைஞர் ஆட்சியில் செவிடன், குருடன், நொண்டி என அழைக்கப்பட்டவர்கள் ’மாற்றுத்திறனாளி’ என அழைக்கப்பட்டனர். அலி, அரவாணி என அழைக்கப்பட்டவர்கள் இன்று ’திருநங்கைகள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இது திராவிட ஆட்சியில் நடந்தது. இருளர் சமுதாயத்தை தேடிச்சென்று உதவியவர் முதல்வர் ஸ்டாலின். இது தான் திராவிட மாடல்.

காமராஜர் கொண்டுவந்தது காங்கிரஸ் மாடல் அல்ல. அதுவும் திராவிடம் தான். எதைக் கொடுத்தால் தாழ்த்தப்பட்டவர்கள் பிற்படுத்தப்பட்டவர்கள் படிப்பார்கள் என பள்ளியில் உணவை கொடுத்தது திராவிட மாடல். தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களை கல்வியில் உயர்த்தியது திராவிடம். எனவே, ஆரியத்தை தூக்கி எறிந்து திராவிடத்தை தூக்கிப் பிடிப்போம்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டிற்கான தனி கல்விக் கொள்கை விரைவில் வெளியீடு - அமைச்சர் பொன்முடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.