திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகேயுள்ள கடந்தூர் ஞானபிரகாசம் என்பவர் வடிவமைத்துள்ள சிறிய ரக பாரோ கிளைடர் விமானம் மூலம் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மருந்து தெளித்து வந்துள்ளார்.
அந்த விமானத்தைப் பயன்படுத்தி பொள்ளாச்சி நகரப்பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க சட்டப்பேரவை துணைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து பொள்ளாச்சி வந்த இந்த குழுவினர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் இருந்து பாரோ கிளைடரை இயக்கினர். சிறிய ரக பாரோ கிளைடரில் ஒருவர் 35 லிட்டர் கிருமி நாசினியுடன் நகரப்பகுதிகளின் மேல் பறந்து மருந்து தெளித்தனர்.
இந்தப் பாரோகிளைடரைப் பயன்படுத்தி தினந்தோறும் பொள்ளாச்சி நகரப்பகுதிகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் மருந்து தெளிக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் பொள்ளாச்சி ஜெயராமன், சார் ஆட்சியர் வைத்திநாதன், துணை கண்காணிப்பாளர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: 'என்னோட பையன எப்படி நீ அடிக்கலாம்' சாலையில் சண்டையிட்ட காவலர்கள்!