கோயம்புத்தூர்: தொண்டாமுத்தூர் சுகுணாபுரம் பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடைபெற்ற நிலையில், வடவள்ளி பகுதியில் உள்ள அதிமுக கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்ட இளைஞரணி செயலாளரும், பாரா ஒலிம்பிக் கமிட்டியின் தலைவருமான இ.சந்திரசேகர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடைபெற்றது.
இதனால் அப்பகுதியில் கட்சி உறுப்பினர்கள், பொது மக்கள் அதிகமானோர் கூடியதால் காவல்துறையினர் அவர்களை அப்புறப்படுத்தினர். இதையடுத்து கட்சி உறுப்பினர்கள் திமுக அரசை கண்டித்தும், காவல்துறையினரை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.
தள்ளு முள்ளு
இதனைத் தொடர்ந்து அவருக்கு சொந்தமான குளத்துபாளையம் பண்னை வீட்டில் நடைபெற்ற சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்படாத நிலையில், அங்கு அவரை அழைத்துச் சென்று கையெழுத்து வாங்கி வந்தனர்.
அப்போது அவர் கைது செய்யப்பட்டு விட்டார் என்று எண்ணி தொண்டர்கள் பேரி கேட்டுகளை அப்புறப்படுத்த முயன்றனர். இதனால் அங்கு தள்ளு முள்ளு ஏற்ப்பட்டது. மீண்டும் அவரது இல்லத்தில் சோதனை நடந்தது.
அவரது சொகுசு காரிலும் சோதனை நடத்தப்பட்டது. அவரது இல்லத்தில் சோதனை முடிந்த பின் பி.என்.புதூர் பகுதயில் உள்ள தாயார் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
இதனிடையே கோவை வடக்கு சட்டப்பேரவை உருப்பினர் அம்மன் அர்ஜுனன் அவரது இல்லத்திற்கு வந்தார். அவரது வீட்டில் நடந்த சோதனையின் முடிவுகள் குறித்து அலுவலர்கள் காவல்துறையினர் எதுவும் கூறாத நிலையில், சில ஆவணங்களை அலுவலர்கள் எடுத்து சென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எஸ்.பி. வேலுமணி வீட்டில் ரூ. 13 லட்சம் பறிமுதல்