ETV Bharat / state

'ஜே.பி. நட்டாவின் பயணம் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சியாக அமையும்' - அண்ணாமலை - பாஜக

'கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவின் பயணம் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சியாக அமையும்' என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஜேபி நட்டாவின் பயணம் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சியாக அமையும் - அண்ணாமலை

author img

By

Published : Dec 27, 2022, 5:54 PM IST

'ஜே.பி. நட்டாவின் பயணம் பாஜகவிற்கு மிகப்பெரிய எழுச்சியாக அமையும்' - அண்ணாமலை

கோவை: பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, கோவை மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இன்று கோவை வந்துள்ளார். கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் ஜே.பி. நட்டா வழிபாடு நடத்த திட்டமிடப்பட்டு இருந்த நிலையில், விமான தாமதம் காரணமாக இந்நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு அவரின் பயணத் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது.

இந்நிலையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள் வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.

பின்னர் கோவில் முன்பு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ' கோவை, நீலகிரி தொகுதியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜே.பி. நட்டா பங்கேற்கிறார். கோட்டை ஈஸ்வரன் கோயிலில் தமிழக மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தோம்’ என்றார்.

பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவை வரவேற்க அதிமுக தலைவர்கள் ஏன் வரவில்லை என்ற கேள்விக்கு, ’அதிமுகவை பொறுத்தவரை மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் ஏற்கெனவே தேதி அறிவித்தபடி நடக்கிறது’ என்றார்.

’ஜே.பி. நட்டாவின் சுற்றுப்பயணம் கோவையில் இருந்து துவங்குகிறது. தமிழகத்தில் இருந்து தனது பயணத்தை ஜே.பி. நட்டா துவக்க உள்ளார். நீலகிரி தொகுதியில் எல்.முருகன் கவனம் செலுத்தி வருகிறார். ஜே.பி. நட்டாவின் பயணம் மிகப்பெரிய எழுச்சியாக அமையும்’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஓபிஎஸ்ஸை கட்சியில் சேர்ப்பதற்கு வாய்ப்பில்லை; மா.செ. கூட்டத்தில் எதிர்ப்புக் குரல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.