கோயம்புத்தூர்: பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்றார். பின்னர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குள்பட்ட கோல்டுவின்ஸ் துரைசாமி நகர் பகுதியில் உள்ள நியாய விலை கடை முன்பு மத்திய அரசின் இலவச அரிசி திட்டம் குறித்து பொதுமக்களிடையே பரப்புரை செய்தார்.
பின்னர் நியாயவிலைக் கடையில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை சுவரில் மாட்டி வைத்தார். ஏற்கனவே நியாயவிலை கடையில் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைபடங்கள் வைக்கப்பட்டுள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பாஜக ஆதரவாளர் ஒருவர் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்க முயன்றார்.
அப்போது அவர் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஆலாந்துறை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'இனி ரேஷன் கடைகளில் ஆவின் பொருட்கள் கிடைக்கும்' - அமைச்சர் நாசர் அறிவிப்பு