ETV Bharat / state

மூதாட்டி கொலை; 8 மணி நேரத்தில் குற்றவாளிகளை கண்டுபிடித்த பொள்ளாச்சி போலீஸ்! - pollachi old lady murder

பொள்ளாச்சி அருகே மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில் எட்டுமணி நேரத்தில் குற்றவாளிகளான மருமகள் உட்பட 5 பேரை பொள்ளாச்சி போலீசார் கைது செய்துள்ளனர்.

பொள்ளாச்சி அருகே மூதாட்டியை கொலை
பொள்ளாச்சி அருகே மூதாட்டியை கொலை
author img

By

Published : May 14, 2023, 3:51 PM IST

கோயம்புத்தூர்: கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே மூதாட்டியைக் கொலை செய்த வழக்கில் எட்டுமணி நேரத்தில் குற்றவாளிகளான மருமகள் உட்பட 5 பேரை கைது செய்துள்ளனர், பொள்ளாச்சி போலீசார். பொள்ளாச்சி அருகே வடுகபாளையத்தைச் சேர்ந்த தெய்வானையம்மாள்(75) தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் மூதாட்டி இறந்து இருப்பதாக, பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் வந்தது.

விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அதில் நகைக்காக மூதாட்டியைக் கொலை செய்தது தெரியவந்தது. விசாரணையில் சஞ்சய், கௌதம், ஈஸ்வரி, பானுமதி மற்றும் 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் கூறியதாவது, “தெய்வானையம்மாள் வீட்டில் மருமகள் ஈஸ்வரி தனது மகன் சஞ்சய் உடன் குடியிருந்து வந்தார். பின்னர் அதே தெருவில் ஈஸ்வரி மற்றொரு தனி வீட்டுக்குச் சென்றார். அவ்வப்போது தெய்வானையம்மாள் உதவி செய்ய சஞ்சய்யை அழைப்பது வழக்கம். இந்நிலையில், சஞ்சய்க்கு, பைக்குக்கு பணம் கட்ட, 50 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டுள்ளது. மூதாட்டியிடம் நகையைப் பறிக்க திட்டமிட்ட சஞ்சய்(18) மற்றும் அவரது நண்பர்களான கவுதம்(19), 16வயது சிறுவன் ஆகியோருடன் தெய்வானையம்மாள் வீட்டுக்குச் சென்றனர்.

பின்னர் மூதாட்டியைக் கொலை செய்து, எட்டரை சவரன் நகையை திருடிச் சென்றனர். பாட்டி இறந்த தகவல் தெரிந்து கொண்டு அங்கு சென்ற ஈஸ்வரி பீரோவில் இருந்த 20ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துச் சென்றுள்ளார். இது எல்லா விஷயங்களும் மூதாட்டியின் மருமகளான பானுமதிக்கு தெரிந்தும் மறைத்தது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து மருமகள் உட்பட 4 பேரையும் மேற்கு காவல் நிலைய போலீசார் கைது செய்ததுடன் நகை மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி கூடுதல் எஸ்.பி. பிருந்தா மேற்பார்வையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மணிக்குமார் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை 8 மணி நேரத்தில் பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

பொள்ளாச்சி JM நீதிமன்றம் இரண்டில் ஆஜர்படுத்தி 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும் ஐந்து பேரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க உள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர். மூதாட்டி கொலை வழக்கில், மருமகள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பல்லாவரம் சந்தையில் கீரிபிள்ளை முடியில் வண்ணத்தூரிகை.. வனத்துறை அதிரடி நடவடிக்கை!

இதையும் படிங்க: "விடியா அரசில் தலைத்தூக்கிய கள்ளச்சாராய கலாச்சாரம்" விழுப்புரம் சம்பவத்தை தொடர்ந்து ஈபிஎஸ் கடும் விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.