கோவை தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான் மக்களிடம் வித்தியாசமான முறையில் தனக்கு ஆதரவு கோரி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று உக்கடம் லாரிபேட்டை பின்புறம் உள்ள மொத்த மீன் மார்க்கெட்டிற்கு சென்று மீன் வியாபாரிகள், பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுத்து ஆதரவு திரட்டினார்.
அப்பொழுது, திடீரென மீன் மார்க்கெட்டில் மீனை சுத்தம் செய்து வெட்டி, ஒரு கிலோ 100 ரூபாய் என்று வியாபாரத்தில் இறங்கினார். இதையடுத்து, அவருடன் பொதுமக்களும் வியாபாரிகளும் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கே இருந்த நபர் ஒருவர் இடையூறு செய்ததால், விளையாட்டாக மீனை கொண்டே அவரது தலையில் அடித்துள்ளார்.