ETV Bharat / state

கோவையில் ஒரு புதிய யானை பாதை! வனத்துறை முயற்சிக்கு கிடைத்த வெற்றி! - elephant news in coimbatore

கோயம்புத்தூரில் ரயில் விபத்துகளில் இருந்து யானைகள் உயிரிழப்பதை தடுக்க வனத்துறை எடுத்த முயற்சி வெற்றி அடைந்துள்ளது. முதல் முறையாக வனத்துறை அமைத்த சுரங்க பாதை வழியாக ஒற்றை ஆண் யானை தண்டவாளத்தைக் கடந்துள்ளது.

சுரங்கப்பாதை வழியாக சென்ற காட்டு யானை! வனத்துறை எடுத்த முயற்சி வெற்றி

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 24, 2023, 1:25 PM IST

Updated : Aug 24, 2023, 7:57 PM IST

கோவையில் ஒரு புதிய யானை பாதை!

கோயம்புத்தூர்: தமிழ்நாடு கேரளா இடையே உள்ள ரயில்வே இருப்புப் பாதையில் உள்ள சுரங்கம் ஒன்றை, ஒற்றை ஆண்யானை கடந்துள்ளது. ஆகஸ்ட் 23 அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த சம்பவம் ஒரு சாதாரண வன விலங்கின் நகர்வு மட்டும் அல்ல. பேருயிர்களை காக்க வனத்துறை மேற்கொண்ட கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு கோவை வழியாக நாள்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரை இரண்டு இரயில் வனப்பகுதி பாதை வழியாக செல்கின்றன. இதில் முதல் இரயில் பாதை A லைன் 17 கி.மீ. தொலைவிலும், இரண்டாவது இரயில் பாதை B லைன் 23 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

அடர்ந்த வனப்பகுதி என்பதால் வனத்தில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் இரயில் தண்டவாளத்தை கடக்கும்பொழுது, ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மேலும், கேரள மாநிலம், வாளையார் முதல் பாலக்காடு வரையிலான இரயில் பாதையிலும் இரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பது நடந்து வருகிறது. குறிப்பாக, கடந்த 15 ஆண்டுகளில், 6 முறை ரயில் விபத்துகளில் சிக்கி 11 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன.

காட்டு யானைகள் இரயில் விபத்துகளில் உயிரிழப்பதை தடுக்க, இரயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டும், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள இரயில் பாதைகளில் வேகமாக இரயிலை இயக்கக்கூடாது என அறிவுறுத்தியும், இரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், யானைகளின் நடமாட்டத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறை இணைந்து, ரயில் பாதைகளில் தெர்மல் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்கும் வகையில், யானைகள் ரயில் பாதையை கடக்கும் இடங்களில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று சூழலியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கையைத் தொடர்ந்து, பாலக்காடு இரயில்வே கோட்டம் சார்பில், 7.49 கோடி ரூபாயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதன்படி, இரண்டாவது பாதையான B லைனில், மதுக்கரை - எட்டிமடை ரயில் நிலையங்களுக்கு இடையே 8 மீட்டர் உயரமும், 18 புள்ளி 3 மீட்டர் அகலமும் கொண்ட சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.

புதிய சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளதால், யானைகள் சுரங்கப்பாதை வழியாக ரயில் தண்டவாளத்தை கடந்து செல்ல வசதியாக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், தமிழக வனத்துறை செயலர் சுப்ரியா சாகு மற்றும் தமிழக வனத்துறை தலைமை வன பாதுகாவலர் சீனிவாச ரெட்டி ஆகியோர் கடந்த வாரம் மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்ததுடன், அங்கு அமைக்கப்பட உள்ள தெர்மல் கேமரா பயன்பாடு குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட்23) அன்று, அதிகாலை 3 மணி அளவில் புதிதாக கட்டப்பட்ட சுரங்க பாதையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவின் எச்சரிக்கை செய்தி, வனத்துறையினருக்கு சென்றது. அதனைத்தொடர்ந்து, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை வனத்துறையினர் ஆய்வு செய்தபொழுது, வனப்பகுதியில் இருந்து ஆண் யானை ஒன்று வெளியேறி சுரங்கப்பாதை வழியாக சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து கோவை மண்டல வன பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் கூறுகையில், வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதைகள் வழியாக யானைகள் செல்ல ஆரம்பித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.மேலும், ரயில் தண்டவாளத்தை தவிர்த்து, யானைகள் இந்த சுரங்கப்பாதை வழியாக பயணித்தால் ரயில் விபத்துகளில் ஏற்படும் யானைகள் உயிரிழப்பை தடுக்க முடியும். மேலும், யானைகள் அடிக்கடி கடக்கும் இடங்களை கண்டறிந்து அங்கும் சுரங்கப்பாதை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ரயில்பாதையை யானை கடக்கும் போது சாணமிட்டுள்ளதால், இதனை பின்பற்றி மற்ற யானைகளும் இந்த பாதையை பயன்படுத்தும் வாய்ப்பு எதிர்காலத்தில் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். யானைகள் பொதுவாகவே தாங்கள் வழக்கமாக பின்பற்றும் வலசை பாதையை அவ்வளவு எளிதில் மாற்றுவதில்லை. மனிதனால் உருவாக்கப்பட்ட பாதுகாப்பான பாதையை காட்டு யானை பயன்படுத்தத் துவங்கியிருப்பது வனத்துறை மற்றும் இந்திய ரயில்வேயின் கூட்டு முயற்சிக்கு கிடைத்திருக்கும் வெற்றியாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: Chandrayaan-3: சந்திரயான் வெற்றி.. கோவையில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

Last Updated : Aug 24, 2023, 7:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.