ETV Bharat / state

அம்ரித் பாரத் நிலையத் திட்டம்:கோவை போத்தனூர் ரயில் நிலையத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்! - வானதி ஸ்ரீனிவாசன்

அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் கோவை போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் உலக தரத்தில் கோவை ரயில் நிலையம் ரூபாய் 500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. அப்போது அதனை ஒட்டியுள்ள ரயில் நிலையங்களும் மேம்படும் என பாஜக எம் எல் ஏ வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

கோயம்பத்தூர்
Coimbatore
author img

By

Published : Aug 7, 2023, 1:36 PM IST

கோவை: மத்திய அரசின் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் கோவை போத்தனூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்பட உள்ளது. அதற்கான, துவக்க விழா கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது. அதில், பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகளுக்காக அடிக்கல் நாட்டினார்.

சேலம் கோட்டத்திற்கு கீழ் வரும் இந்த கோவை போத்தனூர் ரயில் நிலையம் ரூ.24 கோடி செலவில் மேம்படுத்தப்பட உள்ளது. கோவை போத்தனூர் ரயில் நிலைய மேம்பாட்டு திட்ட அடிக்கல் நாட்டு விழாவில், பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம், பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், கோவை தெற்கு எம்.எல்.ஏ., வுமான வானதி ஸ்ரீனிவாசன், கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரன், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் பங்கேற்றனர். பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியதை அடுத்து, போத்தனூர் பணிகளை விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ.,க்கள் வானதி ஸ்ரீனிவாசன், தாமோதரன், எம்.பி., சண்முகசுந்தரம் ஆகியோர் அடிக்கல் கல்வெட்டை திறந்து வைத்தனர்.

முன்னதாக விழாவில் பேசிய கோவை கிணத்துக்கடவு அதிமுக எம்.எல்.ஏ., தாமோதரன், பாரம்பரிய பழமையான ரயில் நிலையமான போத்தனூர் ரயில் நிலையத்தில் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், தமிழக தெற்கு பகுதிகளுக்கு போதிய ரயில்கள் இயக்கப்படுவதில்லை.

இதையும் படிங்க: மாநில சுயாட்சி நாயகன் மு.கருணாநிதியின் 5ஆம் ஆண்டு நினைவு நாள்..

கோவையின் 2-வது ரயில் முனையமாக போத்தனூர் ரயில் நிலையத்தை அமைக்க கோரிக்கை விடுத்தார், கோவை மாநகரில் நடந்து வரும் மேம்பால பணிகளால் சாலை மார்க்கமாக கிணத்துக்கடவு, போத்தனூர் மக்கள் நகரில் செல்வதற்கு சிரமத்தை சந்தித்து வருவதால், கோவை-கிணத்துக்கடவு இடையே ரயில்கள் இயக்கவும், இந்த வழித்தடத்தில் பயணிக்கும் ரயில்கள், கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் நிற்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய ரயில் நிலையங்களை கேரள மாநிலம் பாலக்காடு கோட்டத்தின் கீழ் வருவதால், ரயில் சேவை புறக்கணிக்கப்படுகிறது. அதனால் இந்த ரயில் நிலையங்களை சேலம் அல்லது மதுரை கோட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். கோவையை தலைமையிடமாக கொண்டு தனி கோட்டமாக உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

பின்னர் பேசிய பொள்ளாச்சி திமுக எம்.பி., சண்முகசுந்தரம், தொழில் துறையில் முன்னோடியாக உள்ள, தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்ற அழைக்கப்படும் கோவை மாவட்டம் 40 லட்சம் மக்கள் தொகையில் முன்னேறி வருகிறது. பதிவு செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்கள் உட்பட மொத்தம் 2 லட்சம் எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களும், 450 பெரு நிறுவனங்களில் 45,000 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். 500 மென்பொருள் நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் மொத்தம் 13 லட்சம் தொழிலாளர்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில் ரயில் சேவை கோவை மாவட்டத்திற்கு போதுமானதாக உள்ளதா என்றால் இல்லை. தமிழகத்தில் மூன்றாவதாக துவங்கப்பட்ட நிலையம், 162 ஆண்டுகள் பாரம்பரிய ரயில் நிலையம், மகாத்மா காந்தி வந்து சென்ற ரயில் நிலையம் என்ற பெருமைகளுக்கு உரித்தான போத்தனூர் ரயில் நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என்ற பல ஆண்டுகள் கோரிக்கையின் இடைக்கால நிவாரணமாக தற்போது அம்ரித் திட்டத்தின் கீழ் ரூ.24 கோடி மதிப்பில் மேம்பாடு திட்டம் உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி.பதவி - நாளைய விவாதத்தில் பங்கேற்கிறார்!

கோவையிலிருந்து சென்னை, பெங்களூருக்கு 90 சதவிதம் கோவை மக்கள் சாலை மார்க்க போக்குவரத்தை தான் நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. ஒரு லட்சம் பேர் வந்து செல்லும் மாவட்டத்திற்கு போதிய ரயில்கள் இல்லை. சென்னையை போல மின்சார ரயிலோ, மெட்ரோ ரயிலோ இல்லாததால் இந்த தொலைதூர ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

பொள்ளாச்சி-திண்டுக்கல் வரை அகல ரயில்பாதை மேம்படுத்தப்பட்டும், 1000 கோடி ரூபாய் செலவு செய்தும் குறைவான ரயிலே இயக்கப்படுவதை குறிப்பிட்டு, மீட்டர் கேஜ் ரயில் தடத்தை அகல ரயில்பாதையாக மேம்படுத்தப்பட்டும், முன்பு இயக்கப்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டதை மீண்டும் இயக்க வேண்டும். மேலும், 24 கோடி ரூபாயில் இந்த போத்தனூர் ரயில் நிலையம் மேம்பாடு என்பது வரவேற்புக்குரியது என்றாலும், அதிக ரயில்களை நிறுத்துவதற்கும், இயக்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

கோவை சந்திப்பில் உள்ள வசதிகளை போல் 2-வது சந்திப்பு முனையமாக போத்தனூர் ரயில் நிலையத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாதமொரு முறை டெல்லியில் சென்று ரயில் அமைச்சர், துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். ரயில்கள் கூடுதலாக இயக்கப்படும் பட்சத்தில் மட்டும் தான் பயணிகள் பயன்பாட்டிற்கான வசதிகளும் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய மகளிர் அணி தலைவியும், எம்.எல்.ஏ., வுமான வானதி ஸ்ரீனிவாசன், இன்று நாடு முழுவதும் 25,000 கோடி ரூபாய் செலவில் 508 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளதன் துவக்க விழா ஒரே நேரத்தில் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை போத்தனூர் ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக உள்ளது. போத்தனூர் ரயில் நிலையம் மேம்பாடு என்பது தெற்கு பகுதியின் மேம்பாட்டுக்காக இருக்கும். விவசாய பொருளாதாரம் மேம்படும். கோவை போத்தனூர் ரயில் நிலையம் முக்கியத்துவம் பெறாத நிலையில், தற்போது ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் துவங்கப்பட உள்ளன.

கோவை வடக்கு, பீளமேடு, கிணத்துக்கடவு ரயில் நிலையங்கள் மேம்பாடு செய்ய ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையமும் படிப்படியாக மேம்படுத்தப்படும். தென் மாநிலத்திற்கான ரயில் சேவையை அதிகரிக்க கேட்டுக்கொண்டு உள்ளோம். உலக தரத்தில் கோவை ரயில் நிலையம் ரூபாய் 500 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட உள்ளது. அப்போது அதனை ஒட்டியுள்ள ரயில் நிலையங்களும் மேம்படும்.

போத்தனூர் ரயில் நிலைய விழாவில் பிரதமர் மோடி பேசிக்கொண்டிருந்தபோது, விழாவில் பங்கேற்ற பொள்ளாச்சி எம்.பி., சண்முகசுந்தரம் கிளம்பினார். இதுதொடர்பாக கேட்கையில், அமைச்சர்கள் முத்துசாமி, கணேசன் ஆகியோர் ஆய்வு பணியில் பங்கேற்க உள்ளதால் விழாவின் இடையில் இருந்து கிளம்ப வேண்டியதாயிற்று என்று விளக்கம் அளித்தார்.

இதையும் படிங்க: கும்பகோணத்தில் தூய அலங்கார அன்னை பேராலய ஆண்டு பெருவிழா கோலாகல துவக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.