கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயலட்சுமி என்ற மூதாட்டி, மேல்சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்து செல்லப்பட்டார். சிட்கோ பாலம் அருகே சென்றுபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் சாலையில் நடுவே உள்ள தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆம்புலன்ஸுக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் உள்ளிட்ட 6 பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக போத்தனூர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : எரிவாயு விலை உயர்வை கண்டித்து மாநிலங்களவையில் அமளி