தமிழ்நாட்டில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று பொள்ளாச்சி பகுதியில் பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஒன்றிய அலுவலங்களில் வேட்புமனு தாக்கல் செய்ய வேட்பாளர்கள் அதிகளவில் வந்திருந்தனர்.
இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று தனது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்துக் கூறினார்.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் உள்ளாட்சித் துறை சார்பில் கிராம பகுதிகளில் பல நல்ல திட்டங்களை செயல்படுத்தி மத்திய அரசு விருதுகள் பெற்றுள்ளது. அதனால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அமோக வெற்றிபெறும் என நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
இதையும் படிங்க...குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு - சென்னை ஐஐடியில் பேரணி, போராட்டம்