திருப்பூர் தெற்கு மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் கெடிமேடு பகுதியில் கால்நடை வளர்ப்போர் மற்றும் ரேக்ளா பந்தயம் ஆர்வலர்களுடன் திமுக மாநில சுற்றுச்சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் கார்த்திக் சிவசேனாதிபதி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து சுந்தர கவுண்டனூர் பகுதியில் தென்னை விவசாயிகள் மற்றும் தென்னை நார் உற்பத்தி கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "புதிதாக தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ள கால்நடை வைத்திருப்பதற்கான சட்டம் கொண்டு வந்து ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே கால்நடை பல்கலைக்கழகம், கால்நடை பராமரிப்புத் துறை இருக்கிறது. இச்சட்டத்தின் மூலம் கால்நடைகளை அலுவலர்களிடம் பதிவு செய்ய வேண்டும்.
அதன் மூலம் அலுவலர்கள் வீட்டுக்குள் நுழைந்து கால்நடை உள்ளதா என்று சோதனை செய்ய சட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு பதிவு செய்யாவிட்டால் 2 லட்சம் ரூபாய்வரை அபராதம் விதிக்க இச்சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அபராதம் செலுத்தாவிட்டால் விவசாயிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலி விவசாயி எடப்பாடி அரசு கொண்டுவந்துள்ள இச்சட்டத்தின் நோக்கம் பாரம்பரிய கலைகளை அழித்துவிட்டு தனியார் செம்மண் கம்பெனிகள் மூலமாக தமிழ்நாடு மாடுகளுக்கு சினை பிடிக்க ஊசியும், வியாபாரத்தை பெருக்கவே இச்சட்டத்தை கொண்டு வந்துள்ளது" என குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: 13ஆம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம்