ETV Bharat / state

ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக சாதிக்கட்சியாக மாறிக்கொண்டிருக்கிறது - முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி! - o panneer selvam

'இரு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். ஈபிஸ் மற்றும் ஓபிஸ் இருவருமே விபத்தில் பதவிக்கு வந்து விட்டனர்' என முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக சாதிகட்சியாக போகின்றது- முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி பேட்டி

author img

By

Published : Jun 17, 2022, 8:58 PM IST

கோயம்புத்தூர்: விளாங்குறிச்சி பகுதியில் கவுண்டம்பாளையம் அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆறுக்குட்டி அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'அதிமுக தொண்டனாக கருத்து சொல்கின்றேன். நடந்து முடிந்த உள்ளாட்சித்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது. ஆட்சியில் இருந்தபோது பல முறை உள்ளாட்சித்தேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் எஸ்.பி.வேலுமணியிடம் கேட்டபோதும் வழக்கு இருக்கின்றது என காரணம் சொல்லி உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் இருந்தனர். உள்ளாட்சித்தேர்தலை நடத்தி இருந்தால் ஆட்சி போயிருக்காது.

இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பேட்டி கொடுக்கின்றனர். இரு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறார்கள். இருவருமே விபத்தில் பதவிக்கு வந்து விட்டனர். இப்போது தனித்தனியாக ஆட்களை சேர்த்துக்கொண்டு இருவரும் சண்டை போடுவது சரியல்ல.

அதிமுகவின் ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டு, இவர்கள் எதுவும் செய்யவில்லை. உள்ளாட்சித்தேர்தலில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருக்கும் வார்டுகளை கூட கைப்பற்ற முடியவில்லை. கோவையில் வேலுமணி வார்டில் 2000 ஓட்டுகள் அதிகம் வாங்கி, திமுக ஜெயித்து உள்ளது. ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக தற்போது சாதிக்கட்சியாக மாறிக்கொண்டிருக்கின்றது.

என்னை நீக்கினால் நீக்குங்கள்: அதிமுகவினர் வேதனையில் இருக்கின்றனர். ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் ஒதுங்கிக்கொள்ளுங்கள். வேறு யாராவது தலைமைப்பொறுப்பிற்கு வரட்டும். ஜெயலலிதா இருந்தபோது இருந்த கட்சியாக தற்போதைய அதிமுக இல்லை. அன்வர் ராஜாவை ஏன் நீக்கினீர்கள்? கட்சிக்காக பேசினால் நீக்குவீர்கள் என்றால், பேட்டி கொடுப்பதால் என்னை நீக்கினால் நீக்குங்கள்.

சசிகலாவை ஏன் மோசமாக பேச வேண்டும். எடப்பாடி பழனிசாமியை கையை பிடித்து முதலமைச்சர் என அடையாளம் காட்டியவர் அவர். அதிமுக ஆட்சியில் 4ஆண்டுகள் அமைச்சர் ஆபீசுக்கு சென்றால் உரிய மரியாதை இருக்காது. இவர்கள் இருவருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை. அதிமுக சோதனைகளைக் கடந்து வந்த கட்சி. இனி, இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்து இயங்க வாய்ப்பில்லை.

தயவு செய்து அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள். அதிமுக துரோக கட்சியாக மாறி விட்டது. மேல் இருந்து கீழே வரை மாறிவிட்டனர். அதிமுகவில் கோஷ்டிகள் இருந்ததில்லை.

எனக்கு சட்டப்பேரவைத்தேர்தலில் சீட் இல்லை என்றனர். என்னுடன் வேலுமணி பேச வில்லை. நான் ஒதுங்கிவிட்டேன். சசிகலா வர வேண்டும் என சொல்லவில்லை. அனைவரும் சேர்ந்து யாரையாவது தேர்ந்தெடுங்கள். ஒற்றைத்தலைமை வரட்டும். ஆனால், இவர்கள் இருவரும் வேண்டாம்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி பேட்டி

சசிகலா, தினகரன் என அனைவரையும் சேர்த்து கட்சி இயங்க வேண்டும். அதிமுக விவகாரத்தில் பிரதமர் தலையீட்டை ஓ.பி.எஸ் நேற்று வெளிப்படையாக பேசி இருக்க கூடாது. பாஜகவினர் கட்சியை வளர்த்துக்கொண்டு விட்டனர் என்பது உண்மை தான். அதிமுக சாதிக்கட்சியாக இரு பிரிவாக மாறிவிட்டது.

ஓ.பி.எஸ், ஈபிஎஸ் மாவட்டத்தலைவர்கள்:ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் சேர்ந்து என்னை நீக்கினால் சந்தோசம். நான் அரசியல் வேண்டாம் என முடிவு செய்துவிட்டேன். வேறு கட்சியில் இருந்து அழைத்தும் போகவில்லை. திமுகவில் இருந்து அழைத்தும் போகவில்லை. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் இருவரும் மக்கள் தலைவர்கள் கிடையாது. மாவட்டத் தலைவர்கள்.

தற்போது நான் அதிமுகவில் இருக்கின்றேன். ஆனால், ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் தலைமையின் கீழ் இல்லை. இது போன்ற நிலை கட்சிக்கு வரும் என எதிர்பார்த்தேன். இப்போது வந்துவிட்டது’ எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதால் துணை முதலமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டேன்' - ஓ.பன்னீர்செல்வம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.