ETV Bharat / state

முதலமைச்சர் குறித்து அவதூறு - அதிமுக நிர்வாகி கைது

முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பம் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக கோவை மாவட்ட அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகி சுப்பிரமணியம் என்பவரை சைபர் கிரைம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முதலமைச்சர் குறித்து அவதூறு; அதிமுக நிர்வாகி கைது

author img

By

Published : Sep 7, 2022, 11:09 AM IST

Updated : Sep 7, 2022, 11:55 AM IST

கோயம்புத்தூர்: அன்னூர் அருகேவுள்ள மசக்கவுண்டன் செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவராக இருந்து வருகிறார்.

இவர் சமூக வலைத்தளங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் குறித்தும் அவரது குடும்பம் குறித்தும் அவதூறு பரப்பியதாக சைபர் கிரைம் காவல் துறையினருக்கு புகார் வந்தது.

இதனையடுத்து நேற்று (செப். 06) அவர் பணிபுரியும் அலுவலகத்திற்குச் சென்ற காவல் துறையினர், சுப்பிரமணியத்தை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

பின்னர் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணியத்தை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: பல்கலைக்கழக கேட்டுக்குள் புகுந்து அரிசியை ருசித்து சென்ற காட்டு யானை

Last Updated : Sep 7, 2022, 11:55 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.