கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் 40ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநரும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் வேந்தருமான பன்வாரிலால் புரோகித் பட்டமளிப்பு விழாவிற்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு வேளாண்துறை அமைச்சரும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இணைவேந்தருமான துரைக்கண்ணு பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
இவ்விழாவின் தொடக்கத்தில் ஆளுநர் மாங்கன்றுகளை நட்டு, அடவு முறை செயல் விளக்கத் திடலை தொடங்கி வைத்தார். அதன்பின் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இயற்கை தானியங்களான மக்கா சோளம், கிராம்பு, பழங்கள், பருத்தி, கரும்பு, சூரியகாந்தி அதன் விதை போன்றவற்றை பார்வையிட்டார்.
இதையடுத்து, பல்கலைக்கழகத்தின் உறுப்பு மற்றும் இணைப்பு கல்லூரிகளில் பயின்ற 1263 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்' - அமைச்சர் தங்கமணி!