ETV Bharat / state

விளம்பரத்தில் இயங்கி வரும் திமுக ஆட்சி -  எஸ்.பி. வேலுமணி - admk ex minister SP Velumani says DMK government runs on advertising

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், திமுக ஆட்சி விளம்பரத்தில் இயங்கி வருவதாகவும் அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி
அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி
author img

By

Published : May 2, 2022, 10:56 AM IST

கோயம்புத்தூர்: மாவட்டம் சுகுணாபுரத்தில் "நூருல் இஸ்லாம் அனபி சுன்னத் ஜமாத்" பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சியான இப்தார் விருந்து நேற்று (மே.1) அதிமுக சார்பில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி, இஸ்லாமிய சகோதரர்களுடன் அமர்ந்து நல்லிணக்கத்தை பிரதிபலிக்கும் விதமாக நோன்பு கஞ்சி அருந்தி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "அதிமுக சார்பாக அனைவருக்கும் வாழ்த்துக்கள். புனித ஹஜ் யாத்திரை மானியத்தை மத்திய அரசு ரத்து செய்தபோதும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு 6 கோடியை மானியமாக வழங்கியது. கோவை மாவட்ட ஜமாத் அமைப்பினர் நிகழ்ச்சியில் எடப்பாடி 6 கோடியை 10 கோடியாக உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டார்.

இப்தார் விருந்து நிகழ்ச்சியில்  அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி

நாகூர் தர்கா பள்ளி வாசல் மதில் சுவர் புனரமைப்பு பணிக்கு 5.40 கோடி ஒதுக்கி பணிகளைச் செய்து முடித்தது அதிமுக அரசு. புனித ஹஜ் யாத்திரைக்கு 14 கோடி நிதி ஒதுக்கித் தந்ததும் எடப்பாடியார் ஆட்சியில்தான் உலமாக்களுக்கு இலவச மிதிவண்டி அறிவித்தது. ஓய்வூதியம் உயர்த்தி அறிவித்ததும் அதிமுக ஆட்சியில்தான்.

மேலும் நோம்பு கஞ்சிக்கு 3000 பள்ளி வாசலுக்கு 5145 டன் அரிசு வழங்கியது அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு என்றும் பாதுகாப்பான் அரசாக இருப்பது அதிமுக அரசு தற்பொழுது மின்வெட்டு, சாலை பிரச்சனை கடந்த ஆண்டு சீராக இருந்தது. தற்போது மாநகராட்சி 300 சாலைகள், 200 புறநகர் சாலை பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆட்சியர்களும், அதிகாரிகளும் ஏன் இப்படி உள்ளனர். கோவையை புறக்கணிக்கிறார்களா. மக்கள் வரி செலுத்துகிறார்கள், அவர்களுக்கான பணிகளை அதிகாரிகள் நடுநிலையுடன் செய்யுங்கள், வெகு விரைவாக பணிகளை முடிக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி நல்ல திட்டம் 100 ல், 11 தமிழகத்திற்காக அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா பெற்று தந்தார். அதில் கோவையும் ஒன்று, நன்றாக பணிகளை செய்து முடித்துள்ளோம்.

அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி
அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி

இந்த அரசு முறைப்படுத்தவில்லை, தற்பொழுது குப்பைகளும், டைல்ஸ்கள் உடைபட்டு பராமரிப்பு இன்றி காணப்படுகிறது. கோவை மாநகராட்சி செயல்படாத மாநகராட்சியாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. திமுக அரசு விளம்பரத்தில் தான் ஓடுகிறது. விலைவாசி அதிகரித்துள்ளது, அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும், முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறினார்.

இதையும் படிங்க: யார் பெத்த பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது - எடப்பாடி பழனிசாமி கேள்வி?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.