ETV Bharat / state

கோவையில் கார்த்திகேய சிவசேனாபதி காரை சிறைப்பிடித்த அதிமுகவினர்!

கோவை: தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதியின் காரை, அதிமுகவினர் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

vKarthikeya Sivasenapathy
கார்த்திகேய சிவசேனாபதி
author img

By

Published : Mar 15, 2021, 10:05 PM IST

தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி போட்டியிடுகிறார். திமுக சார்பில் கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார்.

இந்நிலையில் இன்று (மார்ச் 15) வேட்புமனு தாக்கல்செய்த அமைச்சர் வேலுமணி, பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்யவுள்ளதாகத் தகவல் பரவியதையடுத்து, அங்கு ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர். அப்போது, பேரூரில் விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி வந்திருந்தார்.

கோவையில் கார்த்திகேய சிவசேனாபதி காரை சிறைப்பிடித்த அதிமுகவினர்

விழா முடிந்து, அங்கிருந்து புறப்பட்ட கார்த்திகேய சிவசேனாபதியின் காரை அதிமுக தொண்டர்கள் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் திமுக, அதிமுக தொண்டர்களிடையே சிறிது நேரம் வாக்குவாதம் நீடித்தது. தொடர்ந்து, அங்கு வந்த காவல் துறையினர் இருதரப்பினரிடையேயும் பேசி கலைந்துசெல்ல செய்தனர்.

இதையும் படிங்க: ’234 அல்ல; எடப்பாடியில் வென்று காட்டுங்கள்’ - ஸ்டாலினுக்கு பழனிசாமி சவால்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.