கோயம்புத்தூர்: வெள்ளலூர் நெடுஞ்சாலை அருகே பாஜக சார்பில் "நம்ம ஊர் பொங்கல் திருவிழா" இன்று(ஜன.8) நடைபெற்றது. அதில் நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்பு சுந்தர் கலந்து கொண்டார். அப்பகுதியை சேர்ந்த மக்களுடன் பொங்கல் வைத்து வழிபட்டார். அதோடு வள்ளிகும்மியாட்டம் நிகழ்வில் கலந்து கொண்டு நடனமாடினா். இதனைத் தொடர்ந்து ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. அப்போது குஷ்பு வண்டியில் சென்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, ‘தமிழ்நாட்டை தமிழகம் என்றும் சொல்லலாம் தமிழ்நாடு என்றும் சொல்லலாம். அது தவறில்லை. எப்படி அழைத்தாலும் இந்தியாவின் அங்கம் தான். பொங்கல் நம்முடைய பாரம்பரிய பண்டிகை, வீட்டில் சந்தோஷம் கொடுக்கும் பண்டிகை இது.
தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசு வெட்க கேடானது. ஒரு கரும்பு, ஆயிரம் ரூபாய் கொடுப்பது பிச்சை கொடுப்பது போன்றது. திமுகவில் பெண்களுக்கு பேருந்து கட்டணம் இலவசம் என்று ஒருவர் கூறுகிறார். மற்றொருவர் பெண்களை இழிவாக பேசுகிறார். சுயமரியாதை உள்ள ஒவ்வொரு தமிழனும் இவற்றை வேண்டாம் என்றுதான் கூறுவார்கள்.
தமிழ் கலாச்சாரத்தை பாதுகாப்பதாக சொல்லும் திராவிட அரசு, இவ்வளவு கேவலாமாக நடந்துக் கொள்ளகூடாது. பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறது. எல்லா பெண்களும் வெளியே போகவில்லை. நானும் கட்சியில் தானே இருக்கிறேன். ராகுல் காந்தி நடைபயணத்தில் கமலஹாசன் பங்கேற்றது அவருடைய கட்சியின் உரிமை.
பொங்கலுக்கு துணிவு, வாரிசு படத்திற்கு போகவில்லை. நான் வீட்டில் தான் இருப்பேன். அண்ணாமலை துணிச்சலான தலைவர், முந்தய தலைவர்கள் போன்று இல்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:செஞ்சிக்கோட்டையில் சிலம்பாட்டமாடி அசத்திய அமைச்சர் செஞ்சி மஸ்தான்