ETV Bharat / state

பெரியார் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமரியாதை செய்தது இல்லை - நடிகர் சிவக்குமார் - செந்தலை ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு பாராட்டு விழா

தந்தை பெரியார் கடவுள் மறுப்பை பேசினாரே தவிர, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமரியாதை செய்தது இல்லை என நடிகர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

actor-sivakumar-says-periyar-hated-brahmanism-he-did-not-hate-brahminsபெரியார் பிராமணியத்தை தான் வெறுத்தார் பிராமணர்களை வெறுக்கவில்லை - நடிகர் சிவக்குமார்
actor-sivakumar-says-periyar-hated-brahmanism-he-did-not-hate-brahmins பெரியார் பிராமணியத்தை தான் வெறுத்தார் பிராமணர்களை வெறுக்கவில்லை - நடிகர் சிவக்குமார்
author img

By

Published : Apr 25, 2022, 11:40 AM IST

கோயம்புத்தூர்: மாவட்டம் சூலூர் தமிழ்ச் சங்கம் சார்பில், தமிழ்நாடு அரசு விருது பெற்ற செந்தலை ந.கவுதமன் மற்றும் சூலூர் கலைப்பித்தன் ஆகியோருக்கு பாராட்டு விழா நேற்று (ஏப்ரல்) நடைபெற்றது. சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி தலைமையில் நடைபெற்ற விழாவில், சிறப்பு விருந்தினராக நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார்.

சூலூர் தமிழ்ச் சங்கம் விழாவில்  நடிகர் சிவக்குமார்

விழாவில் பேசிய அவர், "சூலூருக்கும் சுயமரியாதை கொள்கைக்கும் நிறையத் தொடர்பு உண்டு. தந்தை பெரியார் கடவுள் மறுப்பை பேசினாரே தவிர, கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை அவமரியாதை செய்தது இல்லை. குன்றக்குடி அடிகளார் இருக்கையில் அமர்ந்திருந்த போது அவருக்கு இணையாக உட்கார மறுத்தவர் பெரியார். ஆதிக்க சக்திகளைத் தான் அவர் வெறுத்தார்.

பிராமணீயத்தை தான் அவர் வெறுத்தார், பிராமணர்களை வெறுக்கவில்லை. இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ், மருத்துவர், எஞ்சினியர், வழக்கறிஞர் உட்பட அனைத்து துறைகளிலும் புற்றீசல் போல பணியில் இருப்பதற்குக் காரணம் அன்று தந்தை பெரியார் போட்ட விதைதான். காலங்கள் கூட கூட பெரியார் மீது மரியாதை கூடி கொண்டே செல்கிறது, அவர் மீது விமர்சனங்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றது என தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'தமிழ் இனத்தை சாதி, மதத்தால் பிரிப்பதைத் தமிழர்கள் அனுமதிக்கக்கூடாது' - முதலமைச்சர் ஸ்டாலின் இப்தார் விழாவில் பேச்சு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.