ETV Bharat / state

முதலமைச்சரின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்காட்சியை திறந்து வைத்த நடிகர் சத்தியராஜ்!

“எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற பெயரில் கோவையில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கையை பிரதிபலிக்கும் வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்தியராஜ் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

Actor Satyaraj inaugurated the exhibition reflecting the life of the Chief Minister by cutting the ribbon
முதல்வர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்காட்சியை நடிகர் சத்தியராஜ் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்!..
author img

By

Published : Apr 7, 2023, 10:24 PM IST

முதல்வர் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கண்காட்சியை நடிகர் சத்தியராஜ் ரிப்பன் வெட்டி திறந்துவைத்தார்!..

கோயம்புத்தூர்: வ.உ.சி மைதானத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 70 ஆண்டுகால பொது வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக, “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற பெயரில் அமைக்கப்பட்டுள்ள வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் சத்தியராஜ் இன்று ( ஏப். 07 ) மாலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். அவருடன் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் இருந்தனர். புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட பின் நடிகர் சத்தியராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது பேசிய அவர், "சென்னை மற்றும் மதுரையில் கண்காட்சியை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. கோவையில் உடனே வரும்படியான சூழல் அமைந்தது. புகைப்பட கண்காட்சி மிக சிறப்பாக இருந்தது. முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தது முதல் அவரது வாழ்க்கை வரலாற்றை அருமையாக பதிவு செய்திருக்கின்றனர். திமுகவிற்காக அவர் உழைத்த உழைப்பு, கஷ்டங்கள் போன்றவற்றை பதிவு செய்திருக்கின்றனர். மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை என சிலர் சொல்வதுண்டு, ஆனால் மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்பட்டது, அதன் முதல் தகவல் அறிக்கை போன்றவை இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு அளிக்கப்பட தண்டனைகள் குறித்த சான்றுகளுடன் புகைப்பட கண்காட்சியில் இருக்கின்றன.

ஸ்டாலின், கலைஞரைப் போல வேடம் அணிந்து பரப்புரை செய்வது, அதற்கு எம்.ஜி.ஆர் ஸ்டாலினை பாராட்டுவது போன்ற புகைபடம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த புகைப்படங்களை பார்க்கும்போது சித்தாந்த தெளிவு ஏற்படும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மிகவும் திருப்தியாக இருக்கிறது. நடுத்தர மக்கள், ஏழை மக்கள் திருப்தியாக இருப்பதே மிகப்பெரிய சான்று. எந்த ஆட்சி வந்தாலும் எங்களைப் போன்றவர்கள் நன்றாக இருப்போம், இந்த ஆட்சியில் மக்கள் திருப்தியாக இருக்கின்றனர்” எனக் கூறினார்.

மேலும், ஆளுநர் குறித்த கேள்விக்கு,“சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை நிறைவேற்றாமல் தமிழ்நாடு ஆளுநர் இப்படி நடந்து கொள்ள தேவை இல்லை. ஏன் அப்படி நடந்து கொள்கிறார் என தெரியவில்லை. நல்ல காரியங்களுக்கு ஆளுநர் ஆதரவாக இருந்தால் நன்றாக இருக்கும். மக்களை கருத்தில் கொண்டு ஆளுநர் ஆதரவாக செயல்பட வேண்டும். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் மனிதாபிமானத்துடன் ஆளுநர் அணுக வேண்டும். எல்லா சூதாட்டமும் தடை செய்யப்பட வேண்டிய அவசியம் எனக்கூறிய அவர், சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத் தக்கது அல்ல” என்றார்.

மேலும், “நான் எம்.ஜி.ஆர் ரசிகன், கலைஞர் வேடம் அணிந்து நடித்த நாடகத்திற்கு புரட்சித்தலைவர் பாராட்டுவது எனக்கு பிடித்த புகைபடம்” என தெரிவித்த சத்தியராஜ், அவருக்கும் புரட்சி தலைவரை பிடிக்கும், கோவை மக்கள் அனைவரும் இந்த புகைபட கண்காட்சியை வந்து பார்க்க வேண்டும், இங்கு வரலாற்றை தொகுத்து வைத்துள்ளனர். சித்தாந்தத்தின் நியாயத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த புகைப்பட காட்சியை பார்க்க வேண்டும், திராவிட மாடல் சித்தாந்தத்தின் நியாயம் அப்பொழுதுதான் மக்களுக்கு புரியும் எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரதமர் மோடி நாளை சென்னை வருகை: போக்குவரத்தில் பல்வேறு மாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.