ETV Bharat / state

"அரசு திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவது அவசியம்" - அமைச்சர் எ.வ.வேலு! - ev velu

அரசு திட்டங்களை செயல்படுத்த நிலம் கையகப்படுத்துவது அவசியம் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

Acquisition
Acquisition
author img

By

Published : Nov 30, 2022, 5:35 PM IST

கோவை: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர், கோவை அரசு மருத்துவமனையில் கட்டப்பட்டு வரும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை ஆய்வு செய்தனர். அப்போது, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எ.வ வேலு, "கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடந்து வரும் புதிய கட்டிடப் பணிகள், வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும். தமிழக முதல்வரின் கரங்களால் இந்த கட்டிடம் திறக்கப்படும்.

இங்கு தீக்காயத்திற்கு என்று தனி வார்டு கட்டப்படுகிறது. 8 ஆப்ரேஷன் தியேட்டர்கள் மற்றும் 2 சிறு ஆபரேஷன் தியேட்டர்கள் கட்டப்படுகிறது. அதேபோல மழைக்காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்க, மருத்துவமனை முழுவதும் தார் சாலைகள் அமைக்கப்படும்.

அரசின் சார்பாக வளர்ச்சியை நோக்கி புதிதாக சாலைகளை அமைப்பதாக இருந்தாலும் சரி, சாலைகளை விரிவுபடுத்துவதாக இருந்தாலும், நிலம் கையகப்படுத்துவது அத்தியாவசியம். நிலம் கையகப்படுத்துவது, சாலை அமைப்பது எல்லாம் யாருக்காக? நகரப் பகுதியில் நெரிசலை குறைக்க புறவழிச்சாலை அமைக்கிறோம். அரசு திட்டங்களை செயல்படுத்த நிலம் கையகப்படுத்தி ஆக வேண்டும். விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகுதான், திட்டத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.

அன்னூரில் விவசாயிகள் தொழில் பூங்கா அமைப்பதற்கு எதிரான போராட்டம் குறித்த கேள்விக்கு, இதுகுறித்து துறையின் அமைச்சர் தங்கம் தென்னரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்றும் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

இதையும் படிங்க:'சிற்பி' திட்டம் இனி தமிழ்நாடு முழுவதும் நடத்தப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.