கோவை மதுக்கரைப் பகுதியில் இயங்கி வருகிற சிமென்ட் ஆலையை எதிர்த்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக, தனியார் சிமென்ட் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனியார் சிமென்ட் தொழிலாளர் சங்க ஆலோசகர் சின்னசாமி, "இந்த ஆலையில் உள்ளூரைச் சேர்ந்த 60 ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு வழங்கப்படாத உரிமை அங்கு வேலை செய்யும் 600 வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. ஆலையின் பணி நேரத்தைத் தாண்டி, அதிக நேரம் வேலை செய்ய உள்ளூர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் வலியுறுத்தப்படுகின்றனர்.
இந்த ஆலையில் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு சரியாக ஊதியம் அளிப்பதில்லை. மேலும், தொழிலாளர்களின் உரிமையைக் கேட்டால், அடக்குமுறையை ஏவி விடுகின்றனர். நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணியாளர் பாதுகாப்புச் சலுகைகள் வழங்க வேண்டும்.
இது உள்ளூர் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பறிக்கும் செயல். எனவே ஆலை நிர்வாகிகள் தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். அதுவரை வேலை நிறுத்தம் தொடரும்" எனக் கூறினர்.
இதையும் படிங்க : முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்ற அதிமுக வேட்பாளர்கள்!